நரம்புத் தளர்ச்சி போக்கும் லேகியம் :
சந்திரோதய லேகியம்-------
இஞ்சி-----------------500 கிராம்.
சுக்கு -------- 10 கிராம்
மிளகு-----------------10 கிராம்
திப்பிலி---------------10 கிராம்
கோஷ்டம்------------10 கிராம்
அதி மதுரம்-----------10 கிராம்
சீரகம்----------------5 கிராம்
ஏலம்----------------5 கிராம்
வால் மிளகு----------5 கிராம்
கிராம்பு--------------5 கிராம்
ஜாதிக்காய்-----------5 கிராம்
ஜாதிபத்திரி----------5 கிராம்
இஞ்சியை சிறு சிறு வில்லைகளாக்கி
பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து
பொடி செய்து கொள்ளுங்கள்.
மீதி பொருட்களை இள வறுப்பாக வறுத்து பொடித்துக் கொள்ளுங்கள்.
700 கிராம் சீனா கல்கண்டை 700மி
பசுவின் பாலில் போட்டு பாகுபதம் வந்ததும் பொடிகள் அனைத்தையும் கொட்டி சுருள கிளறி
பின் 175கிராம் பசு நெய் விட்டு நன்றாக கிளறி விடவும்
இறக்கியதும் தேன் 175 கிராம் விட்டு நன்றாக கிளறி பத்திரப்படுத்தி தினம் ஒரு ஸ்பூன் அளவு இரண்டு வேளை உண்ணலாம்.
இது நரம்புகளுக்கு வலு தரும் மந்தம் அஜீரணம் அகலும் சுறுசுறுப்பு உண்டாகும்.
சாப்பாட்டு வகையில் வைட்டமின் 'பி'
சத்துக்கள் உள்ள பழங்கள் கீரைகள் நலம் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக