கற்றல் அடைவுகளில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கற்றல் அடைவுகளில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் உத்தரவு

 


கற்றல் அடைவுகளில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கூட்டம் 22-07-2021 அன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் உத்தரவு.

IMG_20210720_214343

IMG_20210720_214352

தமிழகத்தில் , 2020-2021ஆம் நிதியாண்டில் , 15 வயதுக்கு மேற்பட்ட , முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத 3.10 இலட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் கற்போம் எழுதுவோம் இயக்கம் , ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் எழுத்தறிவு மையங்களில் சேர்ந்து பயின்று வருகின்ற கற்போர்கள் அனைவருக்கும் குறைந்த பட்ச கற்றல் அடைவுகளின் அடிப்படையிலான மதிப்பீட்டு முகாமை வருகின்ற 29.07.2021 முதல் 31.07.2021 வரை நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது . இதுதொடர்பான , காணொளி வாயிலான கூட்டம் வருகின்ற 22.07.2021 அன்று இணைப்பில் கண்டுள்ளவாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு நடத்தப்பட உள்ளது. எனவே , முன்குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்கள் , உரிய திட்ட விவரங்களுடன் , அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தின் படி தவறாது பங்கேற்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டம் சார்ந்த காணொளி இணைப்பு ( Link ) விவரங்கள் இவ்வியக்ககத்தினால் விரைவில் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here