பள்ளி கல்வி துறையில் புகாரில் சிக்கிய அதிகாரிகளுக்கு இடமாறுதல், கட்டாய காத்திருப்பு.? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளி கல்வி துறையில் புகாரில் சிக்கிய அதிகாரிகளுக்கு இடமாறுதல், கட்டாய காத்திருப்பு.?

  

பள்ளி கல்வி துறையில் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அதிகாரிகளை பதவியிறக்கம் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் வைக்க பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது. 


தி.மு.க., அரசு பதவியேற்றது முதல் பள்ளி கல்வி துறையில் மாற்றங்கள் நடந்து வருகின்றன. முதலில் இயக்குனர் பதவியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டார். பின்னர் பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பணியாற்றிய மாற்று பணி ஊழியர்கள் கூண்டோடு இடமாற்றம் போன்ற அடுக்கடுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதை தொடர்ந்து பள்ளி கல்வி துறை புதிய செயலராக காகர்லா உஷா நியமிக்கப்பட்ட பின், பள்ளி கல்வி அதிகாரிகளுக்கான இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர்களான இரண்டு சி.இ.ஓ.,க்கள் மட்டும் இடமாற்றப்பட்டனர்.இந்நிலையில் பள்ளி கல்வி துறையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் சி.இ.ஓ.,க்கள் உள்ளிட்டோரின் பட்டியலை பள்ளி கல்வி துறை தயாரித்துள்ளது. இவர்களில் அதிக புகாருக்கு ஆளானவர்களை முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 


இந்த ஆலோசனையில்இடமாற்றத்துடன் பதவியிறக்கமும் வழங்கலாம் என உயர் மட்ட அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், சி.இ.ஓ.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம்செய்யப்படுவர் என்றும், சிலருக்கு பதவியிறக்கம்இருக்கலாம், சிலர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்படலாம் என்றும் பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here