இரவில் நெல்லிக்காய் சாப்பிடலாமா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவில் நெல்லிக்காய் சாப்பிடலாமா?

 இரவில் நெல்லிக்காய் சாப்பிடலாமா?


பதில்:  இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது


ஏனென்றால் நெல்லிக்காய் குளிர்ச்சி.


இரவு தூக்கம் வருவதற்கு உடலுக்கு சூடு தேவைப்படுகிறது .


எனவே சூட்டை குறைக்கும் எந்த ஒரு பொருளும் இரவில் சாப்பிடக்கூடாது.


சாத்துக்குடி, நெல்லிக்காய் ,சோத்துக்கத்தாழை, இளநீர், தர்பூசணி, முலாம்பழம் இவை அனைத்தும் குளிர்ச்சியை கொடுக்கும். எனவே இரவு சாப்பிடுவதை தவிர்க்கலாம்.


இரவு உணவு சூடாக இருந்தால் நல்லது.


எனவே இரவு உணவை ஆறிய உணவுகளை சாப்பிடாதீர்கள்.லேசாக சூடு செய்து சாப்பிடுங்கள்.


பகலில் நாம் உடலை அசைத்துக் கொண்டே இருப்பதால் உடலுக்கு தேவையான உஷ்ணம் உடல் அசைவின் மூலம் பெற்றுக் கொள்கிறது.


இரவு உடலில் அசைவு குறைவாக இருப்பதால்,  ஒரே நிலையில் பல மணி நேரம் படுத்து இருப்பதால் உடலுக்கு தேவையான உஷ்ணம் கிடைப்பதில்லை.


எனவே இரவு உணவு சூடு அதிகரிக்கும் உணவாக இருந்தால் நன்றாக தூக்கம் வரும்.


எனவே பழங்களை உணவாக எடுத்துக் கொள்பவர்கள் காலை உணவாக பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள் இரவில் தவிர்க்கலாம்.


சப்போட்டா பழம் , பலாப்பழம் , அன்னாசி பழம் பப்பாளி பழம் இவை உஷ்ணத்தை அதிகம் செய்பவை.


இந்தப் பழங்களை இரவில் சாப்பிடலாம்.


நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இரவில் உடலுக்கு சூடு தேவை சூடு கொடுத்தால் தூக்கம் வரும்.


குளிர்ச்சி கொடுத்தால் தூக்கம் வராது.


எனவே மாலை அல்லது இரவு நேரங்களில் இனிமா கொடுக்கக்கூடாது . இனிமா கொடுப்பது உஷ்ணத்தை குறைக்கும்.


மாலை அல்லது இரவு நேரங்களில் தலைக்கு விளக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது,  விளக்கு எண்ணெய் தலையில் தேய்ப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here