சென்னை: மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறினால் மாநில அரசு தேர்வு நடத்த ஏகே ராஜன் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதம் 10ஆம் தேதி நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குழுவை அரசு அமைத்தது.இந்த குழுவிற்கு பல்வேறு தரப்பினர் கருத்துகளை பரிந்துரை செய்து அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில் தங்கள் பரிந்துரைகளுடன் 165 பக்க அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது குழு. நீட் தேர்வு பாதிப்பு- முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஏ.கே. ராஜன் குழு 165பக்க அறிக்கை தாக்கல் செய்தது!85 ஆயிரத்துக்கு மேல் மனுக்கள்மொத்தம் 85 ஆயிரம் பேர் கருத்து கூறியதாகவும் பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக ராஜன் தெரிவித்தார். அந்த அறிக்கையில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறினால் மாநில அரசு தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மாநில நுழைவுத் தேர்வுமாநில அரசின் நுழைவுத் தேர்வு, பிளஸ் 2 மதிப்பெண் இரண்டையும் கணக்கிட்டு மருத்துவ சேர்க்கை நடத்தலாம். மேலும் பரிந்துரையை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றால் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.அரசு பள்ளி மாணவர்கள்நீட் தேர்வு இல்லை என்றாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் தனி உள்ஒதுக்கீடு தேவை என பரிந்துரை செய்யப்பட்டது. ஏ கே ராஜன் குழு பெற்ற 86,462 மனுக்களில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு வேண்டாம் என பரிந்துரைத்துள்ளனர்.நீட் எப்போதுஇந்த நிலையில் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடத்த மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றும் அது வரை மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராகுமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக