ஆசிரியர்களுக்கு இணைய வழியில் தேசியக் கருத்தரங்கு, போட்டிகள் அறிவிப்பு. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர்களுக்கு இணைய வழியில் தேசியக் கருத்தரங்கு, போட்டிகள் அறிவிப்பு.

 


 

IMG_20210721_075820

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், மத்தியக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி மற்றும் விபா நிறுவனம் இணைந்து ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்துவதற்காகத் தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வான வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் தேர்வை நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கரோனா  பேரிடர்க் காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான இணைய வழிக் கருத்தரங்கும், வீடியோ மற்றும் கதை, கவிதை, கட்டுரை, கருத்து வரைபடம் எழுதும் போட்டியையும் அறிவித்துள்ளது.


கருத்தரங்கு மற்றும் போட்டிகளின் நோக்கம்:

பள்ளி ஆசிரியர்களிடையே உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ”ஆகார்கிராந்தி” என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த கருத்தரங்கு மற்றும் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்கள்  மற்றும் பேராசிரியர்கள் இந்த கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

இணையவழிக் கருத்தரங்கு:

இணையவழிக் கருத்தரங்கு ஜூலை 26 முதல் ஆகஸ்டு 23 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும். மொத்தம் ஐந்து கருத்தரங்குகள் நடைபெறும். கருத்தரங்குகளில் உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு, பள்ளி மாணாக்கர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் உணவுப் பழக்கவழக்க முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

வீடியோ தயாரித்தல் மற்றும் திறனறிப் போட்டிகள்:

இந்தப் போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள், 9 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள்  மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள்  நடத்தப்பட உள்ளன.

போட்டிகளுக்கான தலைப்பு:

Ø நமது உள்ளூர் பழங்கள், காய்கறிகள், சரிவிகித உணவு, இயற்கையான ஊட்டச்சத்துள்ள பொருட்கள், பாரம்பரிய உணவுகள், பாதுகாக்கப்பட்ட உணவு முறைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று முதல் ஐந்து நிமிட வீடியோக்களாக எடுத்து அனுப்பலாம்.

Ø வீடியோவாக அனுப்ப இயலாதவர்கள் கதை, கவிதை, கட்டுரை கருத்து வரைபடம், ஓவியம், ஆகிய ஏதாவது ஒரு முறையில் தங்களின் படைப்புகளை மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் அனுப்பலாம் .

Ø வீடியோக்கள் மற்றும் கதை, கவிதை, கட்டுரை ஆகியவற்றைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எடுத்து அல்லது எழுதி அனுப்பலாம்.

Ø இவை அனைத்தும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையைத் தூண்டுவதாக அமைய வேண்டும்.

பரிசுகள் மற்றும் முக்கியத் தேதிகள்:

Ø தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் படைப்புகளுக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆறுதல் பரிசாக 10 ஆசிரியர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசுகளாக வழங்கப்படும்.

Ø இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இணைய வழிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Ø மேலும் தமிழக அளவில் முதல் மூன்று படைப்புகளுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

Ø கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்யக் கடைசித் தேதி 24-07-2021.

Ø கீழ்க்காணும் இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம்

Ø  http://shikshashilpi.vvm.org.in/aahaarkranti/

Ø வீடியோ மற்றும் படைப்புகளை அனுப்பக் கடைசித் தேதி - 30.09.2021

Ø போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி - 22.12.2021

மேலும் தகவல்களுக்கு: 8778201926

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here