இன்றைய ராசிபலன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய ராசிபலன்

 


சென்னை: பிலவ வருடம் ஆடி 02 ஆம் தேதி ஜூலை 18,2021 ஞாயிற்றுக்கிழமை. நவமி திதி இரவு 12.29 மணி வரை அதன் பின் தசமி திதி. சுவாதி இரவு 12.08 மணி வரை அதன் பின் விசாகம். சந்திரன் இன்றைய தினம் துலாம் ராசியில் பயணம் செய்கிறார். மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.மேஷம்சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும்.ரிஷபம்சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வீட்டு சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். நோய் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.மிதுனம்சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வு நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.கடகம்சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.சிம்மம்சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம்.கன்னிசந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களை சந்திப்பீர்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் நண்மைகள் ஏற்படும்.துலாம்சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.விருச்சிகம்சந்திரன் இன்று உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.தனுசுசந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி கூடும். நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் கூட்டாளிகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.மகரம்சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.கும்பம்சந்திரன் இன்றைய தினம் உங்கள் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பயணங்களால் நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை ஓரளவு நன்றாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் சேர்க்கை உண்டாகும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினை நீங்கி மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.மீனம்சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் நிதானம் தேவை. வேலை செய்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here