பாரதியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பாரதியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு!

 


.com/

தமிழகத்தில் பாரதியார் பல்கலையில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு இணையம் மூலம் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மற்ற ஆண்டு பயிலும் மாணவர்களின் முடிவுகளும் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் சரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


செமஸ்டர் தேர்வு முடிவுகள்:


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் தாமதமாக நடைபெற்றது. தேர்விற்கு பின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.


மற்ற பல்கலைக்கழகங்களை தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் அடுத்தகட்டமாக மேல்நிலை படிப்புகளில் சேர வேண்டும் என்பதற்காக முதலில் அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சில மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இது குறித்து விளக்கமளித்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி விடைத்தாள்கள் முறையாக பதிவேற்றம் செய்யாத மாணவர்கள், போதிய வெளிச்சம் இல்லாமல் விடைத்தாளை புகைப்படம் எடுத்து பதிவேற்றிய மாணவர்களுக்கு, மதிப்பீடு செய்ய முடியாமல் ஆப்சென்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார். மேலும் இந்த குறைபாடுகளை கல்லூரி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here