சுழற்சி முறையில் பள்ளி வருகை- ஜாக்டோ கோரிக்கை ஏற்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சுழற்சி முறையில் பள்ளி வருகை- ஜாக்டோ கோரிக்கை ஏற்பு

 ஜாக்டோ - கிருட்டினகிரி

---------------------------------

 சுழற்சி முறையில் பள்ளி வருகை- ஜாக்டோ கோரிக்கை ஏற்பு.


    கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரிய பெருமக்கள் அனைவரும் 100% பள்ளிக்கு வரவேண்டும் என்ற,

 மதிப்புமிகு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் , வாய்மொழி உத்தரவை, ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, மறுபரிசீலனை செய்ய ஜாக்டோ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், உரிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழலில் ,ஜாக்டோ  சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து  06-07 -21 அன்று, இது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

     அதனைத் தொடர்ந்து

 08.07. 21 அன்று மீண்டும் ஜாக்டோ நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து உரிய நடவடிக்கைக்கு ஆவண செய்ய, கோரிக்கை விடுத்ததன் பேரில் ,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை நேரில் வரவழைத்து ஆலோசனை மேற்கொண்டபின், கல்வித்துறை ஆணையர் அவர்களை ஆலோசித்து விட்டு உரிய அறிவிப்பினை தெரிவிப்பதாக மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறினார்கள். அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து,

 09- 07 -21இன்று , நமது ஜாக்டோ ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளருமான, திரு.மா. கிருட்டினமூர்த்தி அவர்களிடம்      

தொடர்பு கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்ந்த அலுவலர் அவர்கள்  , மதிப்புமிகு ஆணையர் அவர்களின் மறு உத்தரவு வரும் வரை, கிருட்டினகிரி மாவட்டத்தில், அனைத்து ஆசிரியப் பெருமக்களும் சுழற்சி முறையில் ஏற்கனவே இருந்த உத்தரவுப்படி பள்ளிக்கு செல்லலாம்  என, ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது‌ என தெரிவித்துள்ளார்கள்.  

ஜாக்டோ- ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கை ஏற்று, உடன் நடவடிக்கை மேற்கொண்ட மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அய்யா அவர்களுக்கு ஜாக்டோ சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 நன்றி!

ஜாக்டோ -கிருட்டினகிரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here