தமிழகத்தில் பிரதம ராக்ஷ மந்திரி விருப்புரிமை திட்டத்தில் கீழ் முன்னாள் படை வீரர்களின் குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கல்வி உதவித்தொகை:
தமிழகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யாத முன்னாள் படை வீரர்களுக்கு அரசு கால அவகாசம் அளித்தது. மேலும் மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021-22ம் கல்வியாண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் 1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் பிரதம ராக்ஷ மந்திரி விருப்புரிமை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற (30.09.2021) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் (31.09.2021) வரையிலும் கல்லூரிகளில் இளங்கலை பயிலும் மாணவர்கள் 30.11.2021 வரையும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம ராக்ஷ மந்திரி விருப்புரிமை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களின் விவரங்களை அளித்து இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற வேண்டும் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக