அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் ( Agastya International Foundation ) எனும் தொண்டு நிறுவனம் , இந்தியாவின் 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் , பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்திட பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது , திருவாரூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , இராணிப்பேட்டை , வேலூர் , திருப்பத்தூர் , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை , ஈரோடு , திருப்பூர் , இராமநாதபுரம் , விருதுநகர் , தேனி , கடலூர் , திருநெல்வேலி , தென்காசி மற்றும் கரூர் ஆகிய 18 மாவட்டங்களில் புதியதாக , Science Centre / Mobile Science lab உள்ளிட்டவற்றை செயல்படுத்திட அனுமதியும் , சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , இராணிப்பேட்டை , கிருஷ்ணகிரி , கோயம்புத்தூர் , திருச்சி , மதுரை , புதுக்கோட்டை , சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் மேற்கண்ட நிறுவனத்தாரால் ஏற்கனவே பள்ளிகளில் செயல்படுத்தி வரும் திட்டங்களை , இக்கல்வி ஆண்டிலும் செயல்படுத்திட அனுமதி வேண்டியும் , அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6 - ஆம் வகுப்பு முதல் 9 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் ( Whats App , Google Meet ) செயல்வழி கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி கோரியும் பார்வையில் காணும் கடிதம் பெறப்பட்டுள்ளது.
தற்போது , Covid - 19 வைரஸ் தொற்றின் காரணமாக , பள்ளிகள் திறக்கப்படாததால் , கொரோனா நோய் தொற்று சார்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , மேற்கண்ட செயல்பாடுகளை சார்ந்த மாவட்டங்களில் செயல்படுத்திட , அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி ஆணை வழங்கப்படுகிறது.
மேலும் , பாளி மாணாக்கர்களின் கற்றல் , கற்பித்தல் பணிகள் பாதிக்காத வகையிலும் , மாணாக்கர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு எவ்விதத்திலும் பாதித்தல் கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டும் , சார்ந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் , மேலும் , மேற்கண்ட நிறுவனத்தின் அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை , ( Science based Activities ) அனைத்துப் பள்ளி மாணாக்கர்களும் பயன்பெறத் தக்க வகையில் , தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் , அனுமதி ஆணை வழங்கப்படுகிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக