அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர தமிழக அரசு உத்தரவு. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர தமிழக அரசு உத்தரவு.

 


.com/

தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உயர்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் எடுப்பது என தமிழக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. அதேசமயம் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை உள்ளிட்டவையும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வருகின்ற 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும். அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர வேண்டும். பேராசிரியர்கள் அனைத்து வேலைநாட்களிலும் கட்டாயம் வருகை தர வேண்டும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்,எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here