தமிழகத்தில் சட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை – அம்பேத்கர் பல்கலை அறிவிப்பு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் சட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை – அம்பேத்கர் பல்கலை அறிவிப்பு!

 


.com/

தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் சட்ட படிப்புகளில் சேர நாளை (04.08.2021) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கல்வி கட்டணம் போன்ற விவரங்களையும் இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர் சேர்க்கை:


தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூலை 19 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த வருடம் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளதால் கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் உயர் கல்வித்துறை ஆன்லைன் மூலம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என அறிவித்தது. அதன்படி ஜூலை 26ம் தேதி ஆன்லைன் மூலம் அதற்கான பணிகள் தொடங்கியது.


மேலும் அரசின் இணையதளத்தில் 150 கலை, அறிவியல் கல்லூரிகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளது. கலை அறிவியல் கல்லூரியை தொடர்ந்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட கல்லூரியில் B.A., LLB (HONS), BBA LLB (HONS), LLB (HONS), BCA LLB (HONS) ஆகிய சட்ட படிப்புகளில் சேர நாளை முதல் (04.08.2021) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


சட்ட படிப்புகளில் சேருவதற்கான கல்வித் தகுதி மற்றும் கல்வி கட்டணம் போன்ற விவரங்களையும் இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆண்டு கால LLB இரண்டு ஆண்டு கால படிப்பான LLM போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here