அரசுப் பள்ளிகளில் அலகுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசுப் பள்ளிகளில் அலகுத் தேர்வு நடத்துவதில் சிக்கல்

 


அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு மொபைல்போன் வசதியில்லாததால் அலகுத் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு கல்வித் தொலைக் காட்சி, இணைய வழியில் பாடங்கள் நடத்தப்படுகிறது. 


வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகள் வழியாக பாடங்கள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கமளிக்கின்றனர்.கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளால் வீட்டிலிருந்து மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இச்சூழலில் மாணவர்கள் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். நேரடி கற்பித்தல் முறை தடைபடுவதால் புதிய வழி முறைகளைப் பின்பற்றி ஆசிரியர்கள் இணைய வழியில் பாடங்களை நடத்த வேண்டும். 


இதேப் போன்று பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதந்தோறும் அலகுத் தேர்வுகளை இணையவழியில் நடத்த வேண்டும். தேர்வுக்கான வினாத்தாள்களை மாவட்ட அல்லது வட்டார அளவில் ஆசிரியர்கள் மூலம் தயாரித்துக் கொள்ள வேண்டும். தேர்வு நாளில் மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் வழியாக மட்டும் வினாத் தாள்கள் அனுப்ப வேண்டும் என சி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும், மெட்ரிக் பள்ளிகளில் வரும் 9ம் தேதி முதல், 14ம் தேதி வரை 6 முதல் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என சி.இ.ஓ., அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


 

கடலுார் மாவட்டத்தில் உள்ள 246 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். இதில், பல மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' போன் வசதியின்றி அலகுத் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது. இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் கூறுகையில், 'பல மாணவர்களுக்கு மொபைல்போன் இல்லாததால் அலகுத் தேர்வு என்பது பெயரளவில் மட்டுமே நடக்கும். 


மொபைல் போன் இல்லாத மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாத நிலையில் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்படும் அச்சம் உள்ளது. பள்ளிகள் திறந்து நேரடி முறையில் தேர்வு நடத்துவதே சாத்தியமானதாகும்' என்றார்.சி.இ.ஓ., அலுவலக அதிகாரி கூறுகையில்,' மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பல மாணவர்களுக்கு மொபைல்போன் வசதியில்லை. எனினும் அவர்களும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here