இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானவை என்று யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்துஉயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பாடங்களை கற்றுத் தரவும்,தேர்வு நடத்தி பட்டங்கள் வழங்கவும் சென்னையில் உள்ள தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபாவுக்கு சட்ட விதிமுறைகளின்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்தி பிரச்சார சபாசார்பில் வழங்கப்படும் அனைத்துகல்விசார் சான்றிதழ்களையும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு அங்கீகாரத் தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதுதொடர்பாக உரியவழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்களை சில கல்வி நிறுவனங்கள் ஏற்க மறுத்ததால், இந்த உத்தரவை யுஜிசி வெளியிட்டதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக