குறுங்கோள் கண்டு பிடித்த ஆய்வில் ஈடுபட்ட , கிருஷ்ணகிரி ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி ஆய்வுக்கழகம் , ஹார்டின் - சிமென்ஸ் பல்கலைக்கழகம் , ஹவாய் பல்கலைக்கழகம் ஆகியவை , நாசாவுடன் இணைந்து குறுங்கோள்கள் குறித்த ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதில் , ஜூலை மாதம் நடந்த ஆய்வில் தமிழக அளவில் , 23 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் கண்டுபிடித்த , 18 மாதிரிகள் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டன. இதில் , கிருஷ்ணகிரி அருகிலுள்ள ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சங்கர் ஆய்வு மாதிரியை சமர்ப்பித்துள்ளார். இவரின் ஆய்வை பாராட்டி , நாசா பாராட்டு சான்று வழங்கியுள்ளது . இதையடுத்து ஆசிரியர் சங்கருக்கு , பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபால் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக