தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் ஆக. 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் ஆக. 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

 ஆதார் தகவல்களை பதிவு செய்து KYC படிவத்தை பூர்த்தி செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20210818_130504

ஒவ்வொரு ஆண்டும் , NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று , தெரிவுசெய்யப்பட்ட , ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு NMMS கல்வி உதவித்தொகை மத்திய கல்வி அமைச்சகத்தால் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் ( DBT ) வரவு வைக்கப்படுகிறது.


இதற்காக , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( DNO ) மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் ( INO ) தங்களது ஆதார் விவரங்களை NSP இணைய தளத்தில் உள்ளீடு செய்து , KYC ) படிவத்தை தவறாமல் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி , ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் 2021 , ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


ஒரு UDISE பள்ளிக் குறியீட்டிற்கு ஒரு தலைமை ஆசிரியரின் ஆதார் விவரங்கள் மட்டுமே NSP இணையதளத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே , இப்பணியை அனைத்து தலைமை ஆசிரியர்களும் மிகுந்த கவனத்துடன் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DSE - KYC Updation Instructions .pdf - Download here...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here