நாம் நம் கவனக்குறைவினால், பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைத்து விடலாம். அதனைத் திரும்ப பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.
முதலில்
காவல் நிலையத்தில் நேரில் சென்று நீங்கள் தொலைத்த சான்றிதழ்கள் என்று குறிப்பிட்டு புகார் பதிவு செய்து அதற்கான lost certificate சான்று பெற வேண்டும்.அல்லது ஆன்லைனிலும் விண்ணப்பித்து பெற்றுகொள்ளலாம்
இரண்டாவதாக
அரசின் அங்கிகாரம் பெற்ற செய்தி தாளில் உங்கள் சான்றிதழ் தொலைந்தது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும்.
மூன்றாவதாக:
நீங்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் நீங்கள் இங்கு தான் படித்தீர்கள் , உங்கள் சான்றிதழ் தொலைந்து விட்டது என்று ஓர் சான்றிதழ் வாங்க வேண்டும் .
நான்காவதாக
மேல் குறிப்பிட்ட இரண்டு ஆதாரங்களையும் சேர்த்து உங்கள் பகுதி வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கவேண்டும் .அதன் பின்பு அந்த மனு உங்கள் பகுதி கிராம அலுவலர் அதிகாரி யிடம் வரும் அவர் விசாரித்து அறிக்கையை மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்கலுக்கு அனுப்புவார் அதன் பின்பு அவர் சரிபார்த்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பார் நீங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தன் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ் போன்றவற்றிற்காக வரைவோலை (DD)எடுக்க வேண்டும்.அதன் பின்பு கடைசியாக
இறுதியாக
பள்ளி என்றால் கல்வி துறைக்கும் அல்லது கல்லூரி என்றால் அதன் பல்கலைக்கழகத்திற்கு சென்று விண்ணப்பிக்கவேண்டும்.
பின்னர் அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் உங்கள் சான்றிதழ் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக