சம்பங்கி பூவில் உள்ள மருத்துவ குணங்கள் !! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சம்பங்கி பூவில் உள்ள மருத்துவ குணங்கள் !!

  



சம்பங்கி  நல்ல நறுமணமுடைய பூ. இதனை சண்பகம் என்றும் அழைக்கப்படுகிறது. நல்ல மனமுடைய பூவாக இருப்பதால் பூஜைகளுக்கு ஏற்றது. இதனை அனைத்து காலங்களிலும் பயிரிடப்படுகிறது. 


சம்பங்கி பூவை ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து அரைத்து தலைவலிக்கு தடவினால் தலைவலி தீரும். கண்களை சுற்றி பற்றுபோட கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல், கண் சிவந்திருத்தல் குணமாகும். சம்பங்கி பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 500 மில்லி தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி தினம் இரண்டு வேலை சாப்பிட வாந்தி, வயிற்று வலி குணமாகும்.


சம்பங்கி பூ மருத்துவ குணங்களும் அதிகளவு உள்ளது. நறுமண பொருட்கள் தயாரிப்பிலும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.


கோடைகாலங்களில் அதிகளவு சரும பிரச்சினைகள் தோன்றும் இதற்கு சம்பங்கித்தைலம் பயன்படுத்தப்படுகிறது. வேர்க்குரு, தோல் அழற்சி போன்ற நோய்களுக்கு சிறந்ததாகும். 50 கிராம் அளவு சம்பங்கிபூவை அரை லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தலாம்.


சம்பங்கிப்பூ 5 அதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணையை சேர்த்து அரைத்து வெற்றியில் நன்றாக தடவினால் தலைவலி குணமாகும். இதன் துளிர் இலைகளை சிறிதளவு அரைத்து சாப்பிட கர்ப்பப்பையில் உள்ள நோய்களை குணமாக்கும்.


இதன் பட்டையை நன்றாக வெயிலில் காயவைத்து தூள் செய்து 5 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும். மேலும் குடற்புண்கள் குணமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here