இனி தேசியப் பாதுகாப்புப் படைகளில் பெண்கள் சேரலாம்.. மத்திய அரசு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இனி தேசியப் பாதுகாப்புப் படைகளில் பெண்கள் சேரலாம்.. மத்திய அரசு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு

 டெல்லி : இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் (தேசிய பாதுகாப்பு அகாடமியில்) பெண்களை அனுமதிக்கும் முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு "நல்ல செய்தி" அளித்துள்ளது இதுவரை ராணுவத்தில் ஆள் சேர்ப்பு என்பது ஆண்களின் கோட்டையாக இருந்தது. இனி பெண்களும் நிரந்தமாக பிரிவில் வேலைக்கு சேர முடியும்.இந்த முடிவு முறைப்படி அரசாணையாக வெளி வந்தால், பெண்கள் 12 ஆம் வகுப்பு முடிந்தவுடன் ராணுவத்தில் வேலைக்கு சேர தயாராகலாம்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.எம். சுந்த்ரேஷ் அமர்பு முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, "ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய முப்படை தளபதிகளும் அரசாங்கமும் நிரந்தர கட்டளை பணியில் பெண்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கடற்படை பயிற்சிக் கல்லூரியில் சேரும் அவர்களுக்கு பின்னர் நிரந்தர கட்டளைப் பணி வழங்கப்படுவதற்கான முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டது," என்று கூறினார். பேருந்து பயணங்கள்.. மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து இருக்கும் தமிழகம்!மத்திய அரசுஉச்ச நீதிமன்றத்தில் அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்ட அதே சமயம், தேசிய ராணுவ கல்லூரிகளில் பெண்கள் சேருவதற்கும், கூட்டு பாதுகாப்புப்படை பயிற்சி நிறுவனத்தில் சேருவதற்கும் தேவையான வழிகாட்டுதல்களை வகுக்க அவகாசம் வழங்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ கேட்டுக் கொண்டார்.விசாரணைஇதையடுத்து வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல், "இந்த விவகாரத்தில் நீண்ட காலமாகவே நாங்கள் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறோம். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பெண்களை சேர்க்க முடிவெடுத்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால், வழிகாட்டுதல்களை வகுக்க எவ்வளவு கால அவகாசம் தேவை என்பதையும் எங்களிடம் தெரிவியுங்கள்," என்று கூறினார். தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.பிற்போக்கு மனநிலைமுன்னதாக, இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணியில் சேரும் பெண்களை நிரந்தர கட்டளை பணியில் எவ்வித பாலின பாகுபாடும் இல்லாமல் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, பெண்கள் நிரந்தர கட்டளை பணியில் சேராத வகையில் பிற்போக்கான மனப்போக்குடன் அரசு செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது. அது பாலின பிரிவினையை தூண்டும் கொள்கை என்றும் நீதிபதிகள் விமர்சனம் செய்தார்கள்.உரிய நடவடிக்கைஇந்திய ஆயுத படைகள் மிகவும் முக்கியமானவை. அதில் பாலின சமத்துவம் ஏற்பட மேலதிக நடவடிக்கை தேவை. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிடும் வரை காத்திருக்காமல் அரசே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.ராணுவம்தற்போதைய நிலையில் 10 லட்சத்து 10 ஆயிரம் பேர் உள்ள இந்திய ராணுவத்தில் பெண் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவாக 0.56 சதவீதமாக இருக்கிறது. இதுவே இந்திய விமானப்படையில் 1.08 சதவீதம், கடற்படையில் 6.5 சதவீதம் ஆக உள்ளது. தற்போது இந்திய ராணுவத்தில் விதிவிலக்காக, கல்விப்பிரிவு, சட்டப்பிரிவு ஆகியவற்றில் சேரும் பெண்கள் மட்டுமே அதிகாரிகளாகவும் நிரந்தர பணியிலும் பதவி வகிக்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு வழிகாட்டுதல்களை வகுத்த பிறகு அவர்களால் நிரந்தர பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும்.பொறியாளர்கள்இந்திய ராணுவத்தில் தற்போது பெண்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், சிக்னல் பிரிவு அதிகாரிகள், நிர்வாகப் பணி, வழக்கறிஞர் பணி போன்றவற்றில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். போர்க்களத்தில் அவர்கள் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை தரலாம் அல்லது கண்ணி வெடிகளை அகற்றலாம் அல்லது தொலைத்தொடர்பு வசதிகளை சரி செய்யலாம். ஆனால், போர்க்களத்தில் எதிரியுடன் சண்டை போட முடியாது. பிரதேச ராணுவ படையணிகள் மற்றும் தளவாட பணியில் அவர்கள் ஈடுபட முடியாது.நல்ல விஷயம்2019இல் பெண்களுக்கு நிரந்தர பணி வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், அது ராணுவ பணியில் 14 வருடங்களுக்கும் குறைவாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உடல் கூறு காரணங்களுக்காக வயதான பெண் அதிகாரிகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாது என்றும் இந்திய ராணுவம் கூறியிருந்தது.இந்நிலையில் தற்போது கட்டளை பணியில் பெண்கள் ஈடுபட அனுமதிக்கும் நடவடிக்கை மிகப்பெரிய நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.உத்தரவுஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் டாக்டர் அனுபமா முன்ஷி, மேலும் பதினோரு பெண் அதிகாரிகளுடன் சேர்ந்து, பெண்களின் நிரந்தர கமிஷன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணையில், இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வழங்க கடந்த ஆண்டு பிப்ரவரி 17 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இப்போது இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்க பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக முறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here