தேவையானவை: நறுக்கிய தூதுவளை கீரை - ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு பல் – 5, மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, தக்காளி – 3, தேங்காய்ப் பால் - அரை கப், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.
#செய்முறை: வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும். இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.
இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.
#பலன்கள்: உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும்.
தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக