"நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் !" சாதிக்கத் துடிப்போருக்கான இலவச ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

"நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் !" சாதிக்கத் துடிப்போருக்கான இலவச ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சி

 சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் சாதிக் ஐ.ஏ.எஸ். அகாடமி, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்களைச் சிறந்த முறையில் தயார்ப்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயார் செய்கிறவர்கள், சாதிக் ஐ.ஏ.எஸ். அகாடமியின் சமூக வலைதளப் பக்கங்களைத் தவறாமல் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தப் பணியின் தொடர்ச்சியாக வரும் அக்டோபர் 2ம் தேதி சனிக்கிழமை (காலை 10.30- 12.00 மணி வரை) ஆன்லைனில் வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது.

நீங்களும் IAS ஆகலாம்

இந்த ஆன்லைன் கருத்தரங்கில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்வது, எப்படித் தயார் செய்வது உள்ளிட்ட திட்டமிடல் குறித்து மாணவர்களுக்கு இருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்க இருக்கிறது.

சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி சாதித்த, டி.தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ்., எம்.மனோஜ் பிரபாகர் ஐ.பி.எஸ்., மற்றும் சாதிக் ஐ.ஏ.எஸ். அகாடமி எம்.ஏ.சாதிக் ஆகியோர் இந்த இணையவழி இலவச வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள்.

கலந்து கொள்கிறவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான வாய்ப்பையும் வழங்க இருக்கிறது சாதிக் ஐ.ஏ.எஸ்.அகாடமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here