பணம் சம்பாதிக்கும் அனைவருமே இப்போது அதில் சிறிய பகுதியை எந்தத் திட்டத்திலாவது முதலீடு செய்ய விரும்புகின்றனர். கொரோனா பிரச்சினை வந்த பிறகு நிறையப்பேர் சேமிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். நீங்கள் பணத்தைச் சேமிக்க தபால் நிலையங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு வரிச் சலுகை போன்ற அம்சங்களும் உள்ளன. இந்தியத் தபால் துறையானது பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தபால் நிலையங்களில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் வெவ்வேறாக உள்ளன. வட்டி விகிதங்கள் அடிக்கடி மாற்றப்படும் என்பதால் நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதம் என்ன என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு முதலீடு செய்தால் நல்லது. இப்போது நடைமுறையில் உள்ள தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்
சேமிப்புக் கணக்கு - 4%
ஒரு வருட டைம் டெபாசிட் - 5.5%
2 வருட டைம் டெபாசிட் - 5.5%
3 வருட டைம் டெபாசிட் - 5.5%
5 வருட டைம் டெபாசிட் - 6.7%
ரெக்கரிங் டெபாசிட் - 5.8%
மூத்த குடிமக்கள் செமிப்பு திட்டம்- 7.4%
மாதாந்திர வருமான திட்டம் - 6.6%
தேசிய சேமிப்பு சான்றிதழ் - 6.8%
பொது வருங்கால வைப்பு நிதி - 7.1%
கிசான் விகாஸ் பத்ரா - 6.9%
செல்வ மகள் சேமிப்பு திட்டம் - 7.6%
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக