அரக்கோணம் அருகே சினிமா பாணியில் ஏர் கன் துப்பாக்கி மூலம் சுட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிளஸ் 2 மாணவர் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். இவர்களிடம் இருந்து ஏர் கன், லேப்டாப், கேமரா உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் தனியாக இருக்கும் வீடுகளைக் குறி வைத்து வட மாநில கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு வீட்டு உரிமையாளர்களை கொலை செய்து விடுவார்கள். கொள்ளையர்கள் படு பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு நகை பணத்தை கொள்ளையடித்துச்செல்வது வழக்கம். அவர்களின் கொள்ளை பாணியே படு பயங்கரமாக இருக்கும் இதே பாணியில் ஒரு கொள்ளைச் சம்பவம் சில தினங்களுக்கு முன்பு அரக்கோணம் அருகே நிகழ்ந்தது.கன்னிகாபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டில் புஷ்கரன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 17ஆம் தேதிநள்ளிரவு முகமூடி அணிந்த கும்பல் கொள்ளையடிக்க கதவைதட்டினர். வந்திருப்பது கொள்ளையர்கள் என்பதை அறிந்த புஷ்கரன் கதவை திறக்கவில்லை. ஏர் கன் துப்பாக்கிஜன்னல் வழியாக கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் புஷ்கரன், அவரது பாட்டி ரஞ்சிதம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அந்த நேரத்தில் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த கும்பல் புஷ்கரனை கத்தியால் தாக்கி பீரோவில் இருந்து ரூ.25 ஆயிரம் பணம், பெண்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கொள்ளையடித்தது யார்இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகேயுள்ள வியாசபுரத்தைச் சேர்ந்த சின்னராசு, 23 என்பவர் கொள்ளைச் சம்பவங்களில் ஏற்கெனவே ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து அவரிடம் தனிப்படையினர் விசாரித்தபோது புஷ்கரன் வீட்டில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். 17 வயது சிறுவன் கூட்டணிஅவர் கொடுத்த தகவலின் பேரில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் 17வயது பிளஸ் 2 மாணவர் ஒருவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.அக்டோபரில் கொள்ளைதுப்பாக்கி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, பால்வாய்சத்திரம் கிராமத்தில் சொந்த பாதுாப்புக்காக ரேணு என்பவர் ஏர் கன் வாங்கி வைத்து இருந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் அவரது வீட்டில் இவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டபோது இந்த ஏர் கன்னையும் திருடியுள்ளனர்.பிளஸ் 2 மாணவர் பயிற்சிஇந்த ஏர் கன் துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று யூடியூப் வீடியோக்கள் மூலம் பார்த்த 17 வயது சிறுவன் பயிற்சியும் எடுத்துள்ளார். அவர்தான் புஷ்கரன் வீட்டில் ஏர் கன் மூலம் சுட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்தார். பள்ளியில் படிக்கும் மாணவர் தனது உறவினருடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக