அரசு ஊழியர்களுக்கு 4 நாள் வேலை: அடுத்த நிதியாண்டு முதல் அமல்? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு ஊழியர்களுக்கு 4 நாள் வேலை: அடுத்த நிதியாண்டு முதல் அமல்?


gallerye_045845664_2919437

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை, அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தாண்டு துவக்கத்தில், 'தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கான மசோதாவை தயாரிக்கும் பணியில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


இந்நிலையில், இந்த மசோதா பற்றி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது தொழில் நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு, எட்டு மணி நேரம் வீதம், வாரத்தில் ஆறு நாட்களுக்கு 48 மணி நேரம், பணி நேரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்களாக உள்ளன.

  ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதியை மாற்றம் செய்ய அரசு விரும்பவில்லை. எனினும் ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.


மீதமிருக்கும் மூன்று நாட்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதை, தொழிலாளர்களின் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் அனைவராலும், 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது. இவற்றை உள்ளடக்கி, தொழிலாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து, மசோதாவை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


அடுத்த மாதத்தில் மசோதா தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும். அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டான 2022- 23ல், ஏப்ரல் 1ம் தேதி முதல், இதை அமல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here