தமிழகத்தில் 34 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தடுப்பூசி மூலம் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதன் உருமாறிய வைரசான ஒமிக்ரான் உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகிறது. இதில் ஒமிக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவத் தொடங்கி விட்டது.நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பாக இருந்தது. இதையடுத்து அவருடன் தொடர்புடைய மற்றும் பயணித்தவர்களையும் சேர்த்து 89 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி இருந்தது. இவர்களில் 13 பேரின் முடிவுகளில் ஓமிக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும் 41 பேரின் மாதிரி முடிவுகளில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிர்ச்சி.. தமிழ்நாட்டில் திடீரென 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.. பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்வுஇந்தியாவில் உறுதிஓமிக்ரான் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஓமிக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 132 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 34பேருக்கு ஓமிக்ரான் உறுதியாகியுள்ளது.ஓமிக்ரான் பரவல்தெலுங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளா 15, குஜராத் 14, ஜம்மு - காஷ்மீர் 3, ஒடிசா 3, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரப் பிரதேசம் 2, ஒடிசா 2 , சண்டிகர், லடாக், உத்தராகண்ட் ,மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஓமிக்ரான் பரவ தொடங்கி உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.34 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்புஇதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 3வது இடத்தில் உள்ளது. இன்னும 24 பேருக்கும் ஓமிக்ரான் முடிவு வர வேண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இரவு நேர லாக்டவுன்இந்நிலையில், ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு இன்று பகல் 12 மணி அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக