சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு.. மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு.. மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

 


சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என மாநகராட்சியின் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லாததால் அப்போதைய மாநகராட்சி ஆணையர்களால் மறைமுகமாகவே வெளியிடப்பட்டு வந்தது. இதனால் பெரிய அளவில் திட்டங்கள் இல்லை.சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்டது. சென்னையின் 49ஆவது மேயராக ஆர் பிரியா பதவியேற்றார். இந்த நிலையில் இன்னறைய தினம் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.சென்னை மாநகராட்சி பட்ஜெட்கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் கடைசியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மேயர் சைதை துரைசாமி முன்னிலையில் பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சந்தானம் தாக்கல் செய்தார். தற்போது மேயர் ஆர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.


பட்ஜெட் கூட்டம்

அதன்படி காலை 10 மணிக்கு இந்த பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. இதையடுத்து பட்ஜெட்டை சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக சோதனை முயற்சியில் நடந்து வந்த இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.சென்னை மாநகராட்சி பள்ளிகடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.

விலையில்லா நாப்கின்

மேலும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா நாப்கின்கள் வழங்கவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல்நலக் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here