அடக்குமுறைகளைச் சந்தித்து ஆசிரியர் சங்கத்தை உருவாக்கிய போற்றுதலுக்குரிய தோழர் L.G அவர்களின் 100வது பிறந்தநாள் விழா - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அடக்குமுறைகளைச் சந்தித்து ஆசிரியர் சங்கத்தை உருவாக்கிய போற்றுதலுக்குரிய தோழர் L.G அவர்களின் 100வது பிறந்தநாள் விழா

 


*தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி* 

*மாநில மையம்* *நாள்:15.12.2022* 

++++++++++++++++++

*திருச்சியில் தோழர் L.G அவர்களின் 100வது பிறந்தநாள் விழா!*

+++++++++++++++++

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னத்தி ஏராய்ப் பயணித்தவரும், நூற்றாண்டு கண்ட பெருமகனும், இன்றைய நம் இயக்கத் தோழர்களுக்கோர் உந்துசக்தியாய், உத்வேகமாய் விளங்கிக் கொண்டிருப்பவரும், தமிழ்நாட்டில் முதன்முதலில் ஆசிரியர் சங்கம் உருவானபோது கடும் அடக்குமுறைகளைச் சந்தித்து ஆசிரியர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும், தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்கங்களின் பிதாமகன் என்று போற்றப்படுகின்ற மாஸ்டர் இராமுண்ணி அவர்களுடன் இணைந்து இயக்கப் பணியாற்றிய இயக்கச் செம்மல்களில் ஒருவரும்,


சுதந்திரத்திற்கு முன்பாகவே மாணவர் காங்கிரஸில் இணைந்து விடுதலைப் போரில் பங்கேற்று, பின்பு ஆசிரியர் பணியில் சேர்ந்து ஆசிரியர் இயக்கப் போராட்டங்களில் பங்கேற்ற தியாகம் தோய்ந்த தலைவரும், பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து,சுதந்திர இந்தியாவில் வளர்ந்து,நவீன இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நூற்றாண்டு விழாக்கண்ட வரலாற்று நாயகரும்,நம் வழிகாட்டியுமான அன்புத்தோழர் L.கோபாலகிருஷ்ணன் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா அவரது குடும்பத்தாரால் இன்று(15.12.2022) முற்பகல் திருச்சி-ஸ்ரீரங்கத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.*


 *இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் தோழர் மூ. மணிமேகலை,


பொதுச் செயலாளர் தோழர் ச.மயில்,

மாநிலப் பொருளாளர் தோழர் ஜீ.மத்தேயு,

துணப் பொதுச் செயலாளர் தோழர் தா.கணேசன், STFI அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ், மாநில துணைத்தலைவர் தோழர் M.K.முருகன், மாநிலச்செயலாளர் தோழர் த.சகிலா, திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர். ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூற்றாண்டு விழா கண்ட நாயகன் தோழர் L. கோபாலகிருஷ்ணன் அவர்களை இயக்கத்தின் சார்பில் பெருமைப்படுத்தினர்.*


*மேலும், இவ்விழாவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலத் தலைவர்களான தோழர் கோ.முரளிதரன், தோழர் தி.கண்ணன்,


தோழர் ச.மோசஸ்

மற்றும் குஜிலியம்பாறை வட்டாரக்கிளையின் முன்னாள் செயலாளர் தோழர். சுந்தரம்,தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் A.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தோழர் L.G அவர்களின் இயக்கப்பணி களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்து மகிழ்ந்தனர்.*


 *தோழர் L.G அவர்களின் பெருமைகளை, அவர்களின் சிறப்புக்களை அவரது மகன்கள், மகள்கள்,பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் நிகழ்ச்சியில் எடுத்துரைத்து நம்மையெல்லாம் ஈர்த்தனர்.* 






*விழாவின் நிறைவில் தோழர் L.G அவர்கள் தன்னுடைய ஆசிரியர் இயக்க நினைவலைகளில் சிலவற்றை தெளிந்த சிந்தனையோடு எடுத்துரைத்தது மெய்சிலிர்க்க வைத்தது.*



*விழா ஏற்பாடுகளை தோழர்.L.G அவர்களின் குடும்பத்தார் மிகவும் சிறப்பாகச் செய்திருந்தார்கள். தோழர் L.G அவர்களின் வாழ்வு, இயக்கப் பணி ஆகியவை நமக்கெல்லாம் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக நம் கண் முன்னே விளங்கிக் கொண்டிருக்கிறது. அவரது வழியில், அவர் பயணித்த பாதையில் இயக்கப் பணிகளை முன்னெடுப்போம்.*

++++++++++++++++++

*தோழமையுடன்* *ச.மயில்*

 *பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here