இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு



தனிநபர்கள் முதல் சர்வதேச அளவிலான மிகப் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும், டிஜிட்டல் தளங்கள் வாயிலாக தங்களுடைய பொருட்கள் அல்லது சேவையை விளம்பரப்படுத்துவதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனும் இணைய வழி சந்தைப்படுத்துதல்.

முக்கியத்துவம்


சர்ச் இன்ஜின்கள், இணையதளங்கள், சமூக ஊடக தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் மொபைல் போன்கள் ஆகிய பல்வேறு பரிமாணங்கள் வாயிலாகவே டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயல்படுகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் எளிய முறையாகவும், கட்டணம் குறைவாகவும் உள்ளதால், இதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் பயனாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் இத்துறையின் சந்தை அளவு 2015ல், இந்தியாவில் 47 பில்லியனாக இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் 199 பில்லியனை எட்டியது. 2024ம் ஆண்டில் 539 பில்லியன் ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 2030ம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலவச படிப்பு


குறுகியகால இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை கூகுள் உட்பட பல்வேறு தளங்கள் வழங்குகின்றன. இணையத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயல்படுத்தும் வழிமுறைகள் உட்பட பல்வேறு வகையான செயல்பாடுகள் கற்றுத் தரப்படுகின்றன. இப்படிப்பின் வாயிலாக டிஜிட்டல் உலகில் சந்தைப்படுத்துதலின் அடிப்படை திறன்களை கற்றுக்கொள்ளலாம்.


பாடத்திட்டங்கள்


சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் - எஸ்.இ.ஓ., கன்டன்ட், மற்றும் யு-டியூப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு, ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூகுள் நிறுவனம் சான்றிதழை வழங்குகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் இ-காமர்ஸ் உத்திகளை உருவாக்குதல், சர்ச் இன்ஜின்கள், கன்டன்ட் மார்க்கெட்டிங் மற்றும் மின்னஞ்சல் போன்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்தல் மற்றும் ஈடுபடுத்துதல், சந்தைப்படுத்தல் பகுப்பாய்வுகளை அளவிடுதல் மற்றும் ஷேரிங் இன்சைட்ஸ் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.


கூகுள் டிஜிட்டல் கேரேஜ், ஆட்-வேர்ட்ஸ், ஆட்ஸ் சர்ச் அட்வர்டைசிங், சர்ச் நெட்வர்க், ஆட்ஸ் டிஸ்பிளே அட்வர்டைசிங், மொபைல் அட்வர்டைசிங், வீடியோ புரமோஷனல் ஆட்ஸ், ஆட்வேர்ட்ஸ் கீவேர்ட் பிளானர் மற்றும் மை பிசினஸ் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளவும் இப்படிப்பு உதவுகிறது.

Join our telegram https://bit.ly/3n9Wkek


பயன்கள்


டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாயிலாக, பல்வேறு ஆன்லைன் சேனல்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பொருட்களை வாங்க ஊக்குவிக்கவும், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை வளர்க்கவும் முடிகிறது. ஆன்லைன் ஸ்டோர்களை வடிவமைத்தல், தயாரிப்பு பட்டியலை உருவாக்குதல், சந்தை ஆராய்ச்சி நடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவையும் இதில் சாத்தியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here