ஆசிரியர்கள் ஸ்டிரைக். சத்துணவு அமைப்பாளர்களை வைத்து பள்ளிகளை நடத்துவதா?இளங்கோவன் கண்டனம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர்கள் ஸ்டிரைக். சத்துணவு அமைப்பாளர்களை வைத்து பள்ளிகளை நடத்துவதா?இளங்கோவன் கண்டனம்

ஆசிரியர்கள் ஸ்டிரைக்: சத்துணவு அமைப்பாளர்களை வைத்து பள்ளிகளை நடத்துவதா? - இளங்கோவன் கண்டனம்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– 27 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான ‘ஜேக்டோ” சார்பில் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படாமல் முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ‘ஜேக்டோ” அமைப்பு தயாராக இருக்கிறது. ஆனால் யாரிடம் பேசுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 37 ஆயிரம் பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டிய 3 லட்சம் ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக பள்ளிகளை புறக்கணித்து போராடுவதை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் வராத நிலையில், பள்ளிகளை சத்துணவு அமைப்பாளர்களை வைத்து நடத்துவது என்கிற முடிவு மிகுந்த கண்டனத்திற்குரியது. இன்று தமிழக அரசு எடுக்கும் கடும் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் ‘எஸ்மா” சட்டத்தை நினைவுபடுத்துகிறது. இந்நிலை நீடிக்கு மேயானால் ஒட்டுமொத்த தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடந்த காலத்தில் ஆட்சிக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தியதைப் போல மீண்டும் அத்தகைய போராட்டத்தை நடத்துகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here