அண்டிபயாடிக் மருந்துகள் புண்ணியமற்றுப் போகும் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
இதுவரை நாம் கண்டுபிடித்துள்ள அண்டிபயாடிக் நோயெதிர்ப்பு மருந்துகள் எதற்கும் கட்டுப்படாத ஒரு புதிய வகை பாக்டீரியா கிருமியை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கிருமி சீனாவில் மனிதர்களிடத்திலும் பண்ணை விலங்குகளிடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலிஸ்டின் என்ற நோய் எதிர்ப்பு மருந்துக்கு கொஞ்சமும் கட்டுப்படாத தன்மை இந்த புதிய கிருமியிடத்தில் காணப்படுகிறது. வேறெந்த மருந்தும் வேலைசெய்யாதபோது கடைசி கட்ட மருந்தாக பயன்படுத்தப்படும் அண்டிபயாடிக் கொலிஸ்டின் ஆகும்.
பண்ணை மிருகங்களிடத்தில் அளவுக்கு அதிகமாக இந்த மருந்தைப் பயன்படுத்தியதுதான் வீரியம் மிக்க புதிய பாக்டீரியா உருவாகக் காரணம் என்று கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக