முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழகத்தை முந்தியது ராஜஸ்தான்
தமிழகத்தில் ‘உலக தொழில் முதலீட்டாளர்கள்’ மாநாடு கடந்த செப்டம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியன. மாநாட்டின் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கான முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு ‘ரிசர்ஜன்ட் ராஜஸ்தான்’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று (நவம்பர் 19) ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. ராஜஸ்தானில் நடைபெறும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 295 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கான முதலீடுகள் கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.VIKADAN.COM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக