பொருளாதார வளர்ச்சியில் தேக்கம்! ரகுராம் ராஜன் கவலை
இந்தியாவில் முதலீடுகள் கிடைப்பது தடையாக உள்ளதால் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் காணப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது திறனில் 30 சதவிகிதம் வரை குறைவாக உற்பத்தி செய்கின்றன.
தனியார் நிறுவனங்கள் புதிய திட்டங்களில் முதலீடுகள் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியாவில் முதலீடுகள் கிடைப்பது தடையாக உள்ளதால் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் காணப்படுகிறது. அந்நிய நேரடி முதலீடுகள் அதிக அளவில் வரும்பட்சத்தில் இந்த நிலையைப் போக்க முடியும்.
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு 1,940 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 30 சதவிகிதம் அதிகமாகும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பகத் தன்மையின் அடையாளம் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக