நேபாள நாட்டின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடக்கூடாது,....பிரதமர் கே.பி.சர்மா எச்சரிக்கை .. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நேபாள நாட்டின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடக்கூடாது,....பிரதமர் கே.பி.சர்மா எச்சரிக்கை ..

நேபாள நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது ....பிரதமர் கே.பி.சர்மா எச்சரிக்கை...

நேபாள நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது என்று அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளார்.உலகின் ஒரே இந்து நாடு என்று கூறப்பட்டு வந்த நேபாளம், புதிய அரசியல் சாசனத்தின் படி அண்மையில் மதச்சார்பற்ற நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த அரசியல் சாசனத்தில் சிலதிருத்தங்களை செய்ய வேண்டும் என்று நேபாளத்திற்கு இந்தியா நிர்ப்பந்தம் கொடுத்தது.

மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேஸிகள் நடத்தும் வன்முறைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததுடன், இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் தடையை ஏற்படுத்தியது. உலகத்தில் இந்து நாடு என்று இருந்த நேபாளின் உறவை சீர்குலைத்தது இந்துத்வா மோடியின் ராஜதந்திரம்தான் இதனால் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக, நேபாள நாட்டின் இயல்பு வாழ்க்கைபெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மறைமுகமாக நேபாளத்தின் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக, அந்நாட்டினர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி பேசியுள்ளார். அப்போது, "நேபாள நாட்டின் அரசியல் சாசனம் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும், எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை" என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here