கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க அரசு உத்தரவு. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க அரசு உத்தரவு.

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் 10 மாதங்களுக்கு மட்டும் கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். பின்னர் அடுத்த ஆண்டில் புதிதாக நியமனம் செய்துகொள்ளப்படுவர்.கல்லூரிகளில் ஷிஃப்ட்-1-இல் 1,683 பேரும், ஷிஃப்ட்-2-இல் 1,500 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஷிஃப்ட்-1-இல் பணியாற்றும் 1683 பேருக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. தொடர் கோரிக்கைகளுக்குப் பின்னர், இவர்களுக்கு ஊதியம் அளிக்க தமிழக அரசு ஆணை (அரசாணை எண் 458) பிறப்பித்துள்ளது. இதன்படி, இவர்களின் 10 மாத பணிக்கான ஊதியத் தொகையாக ரூ.16.83 கோடிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் சிவராமன் கூறியது: கௌரவ விரிவுரையாளர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைத்துள்ளது. இந்தத் தொகை பண்டிகைக்கு முன்னதாக கிடைக்கும் வகையில், கல்லூரிகளுக்கு தொகையைப் பிரித்தளிக்கும் பணிகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here