திமுக தேர்தல் அறிக்கையில் ப்ரிஜ்,வாஷிங் மெஷின் இலவசம் 80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு திட்டம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

திமுக தேர்தல் அறிக்கையில் ப்ரிஜ்,வாஷிங் மெஷின் இலவசம் 80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு திட்டம்


தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ப்ரிஜ், வாஷிங் மெஷின் இலவசம் மற்றும், 80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட உள்ளதாக, தகவல் பரவி வருகிறது.

தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக, அக்கட்சி மகளிரணி செயலர் கனிமொழி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், தேர்தல் அறிக்கையை இறுதி செய்துள்ளனர். தி.மு.க., வேட்பாளர் நேர்காணல், வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின், தேர்தல் அறிக்கை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. முன்னதாக, தயாரிக்கப்பட்ட அறிக்கையை, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஒப்படைக்க உள்ளனர். 'மற்ற தேர்தல் அறிக்கைகளை போல் இல்லாமல், நெற்றி பொட்டில் அடித்தது போல, இந்த தேர்தல் அறிக்கை அமையும்' என, துரைமுருகன் கூறி வருகிறார். கடந்த தி.மு.க., ஆட்சியில், வீட்டிற்கு ஒரு இலவச கலர் 'டிவி,' காஸ் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டன.

அதேபோன்று, தற்போதைய தேர்தல் அறிக்கையில், வீட்டுக்கு ஒரு ப்ரிஜ், வாஷிங் மெஷின் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் பரவி உள்ளது.கூடவே, 80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும், தி.மு.க., திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாவட்டந்தோறும் உள்ள பிரதான பிரச்னைகளை தீர்க்கவும், திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, தனி தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here