தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி, நேற்று துவங்கியது. வீடு, வீடாக சென்று, ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல், 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும், இலவச கட்டாய கல்வி கிடைக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது. மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரலில், மாவட்டம் வாரியாக, பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து, அந்த பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அந்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து, இலவச கல்வி அளிக்க, ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண் குழு அமைக்கப்படும். இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளால், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்தது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், எஸ்.எஸ்.ஏ.,வின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு, கணக்கெடுப்பு பணி, நேற்று துவங்கியது.கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோர், வீதி, வீதியாக, வீடு வீடாக சென்று, பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து, கணக்கெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டில், இந்த கணக்கெடுப்பின் மூலம், 2,188 பேர் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here