01/08/2016 இன்றைய முக்கிய செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

01/08/2016 இன்றைய முக்கிய செய்திகள்

🏹காலை செய்திகள்🏹

               🖊 01\08\16🖊

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com



💥தங்கம் கடத்தல்: இளைஞர் கைது

ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவை வழியாக தங்கம் கடத்திய கேரள இளைஞரை சுங்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கோவை சர்வதேச விமான விமான நிலையத்தில் சுங்கத் துறை உதவி ஆணையர் ஆனந்த் கல்யாண கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில், கேரளத்தைச் சேர்ந்த சல்மான் பாரிஸ் (25) என்பது தெரியவந்தது. மேலும், அவர் ஆசன வாயில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

பின்னர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதில், 116.5 கிராம் எடையில் 8 தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும்.


🌶பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை அகற்ற வேண்டும்: பழ.நெடுமாறன்

பாலாற்றின் குறுக்கே கட்டியிருக்கும் தடுப்பணையை ஆந்திர அரசு அகற்ற வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

💥ஒருதலைக் காதல் விவகாரத்தில் தீவைப்பு: நீதிபதியிடம் காயமடைந்த பெண் வாக்குமூலம்

விழுப்புரம் அருகே காதலிக்க மறுத்ததால் பெண்ணின் வீட்டுக்குச் சென்று இளைஞர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண் புதுச்சேரி நீதிபதியிடம் சனிக்கிழமை இரவு வாக்குமூலம் அளித்தார்.

🍼தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

ஆந்திரத்தைச் சேர்ந்த ஹெரிடேஜ் நிறுவனம் தங்களது பாலுக்கான விலையை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் லிட்டருக்கு ரூ.2 விலை உயர்த்தியுள்ளது.

நிலைப்படுத்தப்பட்ட ஒரு லிட்டர் பால் ரூ.46-க்கும், கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.50-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள்- தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை:

தன்னிச்சையாக பால் விலையை உயர்த்துவது கண்டனத்துக்குரியதாகும். இந்த பால் விலை உயர்வுக்கு தமிழக அரசு உடனடியாகத் தடை விதிக்கவேண்டும் என்று அதில் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

✈🚔சொகுசு விமானம், கார்கள் உள்பட விஜய் மல்லையாவின் ரூ.700 கோடி சொத்துகள் விரைவில் ஏலம்

📡அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்?

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருக்கும் மேலும் 300 பேரை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான உத்தரவு ஒரிரு நாள்களில் அளிக்கப்பட உள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


🎢புட்லூர் கூவம் ஆற்றில் தரைப்பாலம் கட்ட கோரிக்கை

திருவள்ளூரை அடுத்துள்ளது புட்லூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக மணவாளநகர், வெள்ளவேடு, திருமழிசை, பூந்தமல்லி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்போது நடுவில் உள்ள கூவம் ஆற்றில் இறங்கிச் செல்ல வேண்டும்.

மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் தேங்கும்போது, 5 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள், மிதிவண்டிகளில் செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர்.

💰ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.48 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.48 கோடி வசூலானது.

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தபின், ஸ்ரீவாரி உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 3.48 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பரீக்கர் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடில்லி : 'நாட்டை விமர்சித்து பேசியவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டது' என, பாலிவுட் நடிகர் அமீர் கான் குறித்து, ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் கூறியதற்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


🎙பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை: அமித் ஷா

புதுடில்லி : பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: 


🏠சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் மப்பேடு காவலர் குடியிருப்பு

முறையான பராமரிப்பில்லாததால் மப்பேடு காவலர் குடியிருப்பு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

திருவள்ளூரை அடுத்துள்ளது மப்பேடு ஊராட்சி. இங்குள்ள காவல் நிலையம் அருகே 6 பிளாட்டுகள் கொண்ட காவலர் குடியிருப்பும் கட்டப்பட்டுள்ளது. இங்கு போலீஸார், குடும்பத்துடன் வசிக்காமல் தனியாக தங்குகின்றனர். பிள்ளைகளின் கல்வித் தேவை, மருத்துவ வசதி உள்பட அனைத்து வசதிகளும் திருவள்ளூரில் உள்ளதாலும், அடிக்கடி பணி மாறுதல் கிடைப்பதாலும் இதுபோன்று தங்கியுள்ளனர்.

இதனால், போதிய பராமரிப்பின்றி காவலர் குடியிருப்பு சிதிலமடைந்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில் குடியிருப்பு வளாகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மது அருந்துவதாலும், சூதாட்டத்தில் ஈடுபடுவதாலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.


📋திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

அதில் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை திருமலைக்கு வரும் பக்தர்கள் பெற்று ஆர்ஜித சேவையில் ஏழுமலையானை தரிசிக்கலாம்.

இந்த டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் தரிசன தேதிக்கு முன்தினம் திருமலை விஜயா வங்கியில் காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் தங்கள் பெயர், செல்லிடப்பேசி எண், பெருவிரல் ரேகை பதிவு மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்த டிக்கெட்டுகளை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து சம்பந்தப்பட்ட பக்தரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அதை பெற்ற பக்தர் விரைந்து சென்று பணம் செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்.


🚡ரயில்வே ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகள்

புதுடில்லி : இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகள் வழங்கப்பட உள்ளது. சீருடையை வடிவமைக்கும் பொறுப்பை பிரபல பேஷன் டிசைனர் ரிது பெர்ரி ஏற்றுள்ளார்.நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

🚗பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01-ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.62-இல் இருந்து 60.45-ஆகக் குறைந்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.55.82-இல் இருந்து 53.73 ஆக குறைந்துள்ளது. உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப இந்த விலையில் சிறிய மாற்றம் இருக்கும்.

பெட்ரோல், டீசலின் விலை இப்போது தொடர்ந்து 3-ஆவது முறையாக இப்போது குறைக்கப்பட்டுள்ளது


💥பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.


🏏ராகுல் அசத்தல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு

ஜமைக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஜமைக்கா டெஸ்டில் இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் அசத்தில் சதம் அடிக்க இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்து, 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


📰தேர்தல் கமிஷன் சதி:தம்பிதுரை புகார்

கரூர்;''கடந்த சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சதியால், அ.தி.மு.க.,வுக்கு வேண்டப்பட்ட பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடந்தது,'' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார்

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

✈மாயமான விமானத்தை ஆந்திர காட்டுப்பகுதியில் தேடும்பணி தீவிரம்


📡கேஆர்பி அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி- கேஆர்பி அணை நிரம்பியுள்ளதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி- கேஆர்பி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


📡சட்டசபை: மானியக் கோரிக்கை மீதான விவாதம்

சட்டசபை: மானியக் கோரிக்கை மீதான விவாதம்

2016-2017-ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை ஜூலை 21ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் மீதான பொது விவாதம் 25-ந்தேதி தொடங்கியது. 28-ந்தேதி வரை நடந்த இந்த விவாதத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள். 29-ந்தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் உரை ஆற்றினார்.

இன்று (திங்கட்கிழமை) முதல் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. முதல் நாளான இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.


🏅🎖இந்திய வீரர்கள் பதக்கங்களோடு, மக்களின் இதயங்களையும் வெல்வார்கள்: மோடி பேச்சு


📡ஆண்டிபட்டி சுற்றுவட்டாரங்களில் கனமழை

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. வருசநாடு, அரசரடி, வெள்ளிமழை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 


👨‍👩‍👧‍👧👨‍👨‍👦‍👦சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு

சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளில் இயங்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பணியாற்றி வந்த இந்தியர்கள் கடந்த பல நாட்களாக பசி, பட்டினியில் வாடி வருகின்றனர். கையில் பணம் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் கடும் இன்னலில் சிக்கி உள்ளனர்.


🗿ஆடி திருவிழாவில் கண் திறந்த அம்மன் சிலை... கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை கண் திறந்ததாக கூறப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கோயில் அருகே திரண்டிருந்த பொதுமக்களும், பக்தர்களும் அம்மன் கண் திறந்த காட்சியை பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதும் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். பெண்கள் அங்கேயே குலவையிட்டு வழிபாடு நடத்தினர். இந்த சம்பவத்தால் கோயிலில் பரபரப்பு நிலவி வருகிறது.


🛫டில்லி விமான நிலையத்தில், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவை, அ.தி.மு.க., - எம்.பி., சசிகலா அடித்ததன் பின்னணியில், பண விவகாரம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருவருக்கும் இடையே கொடுக்கல் - வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.

பெரும் தொகை ஒன்றை, சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவிடம் கொடுத்திருந்தார் சமீபகாலமாக அந்த பணத்தை திரும்ப கேட்டு, அவர் போன் செய்துள்ளார். 

போனை எடுக்காமல், திருச்சி சிவா தவிர்த்ததை தொடர்ந்தே, டில்லி விமான நிலையத்தில் வைத்து சிவாவை, சசிகலா புஷ்பா தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது


✖டெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

கிழக்கு டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி, கொலை செய்யப்பட்டு பின்பு அவரது வீட்டில் தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

🏢மும்பையில் மூன்று மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ விபத்து

மும்பை, கோரேகானுக்கு கிழக்கு பகுதியில் உள்ள காமா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் உள்ள ஒரு மூன்று மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

👩‍👩‍👧பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது

தாய், மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலந்த்சாகரில் பாலியல் வன்கொடுமையில் செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று மீரட் டி.ஐ.ஜி லக்ஷ்மி சிங் தெரிவித்துள்ளார்.


😥சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் கவலைக்கிடம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

💎தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கிராம்
3005
24 காரட் 10கிராம்
32140
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
52400    பார் வெள்ளி 1 கிலோ
48970

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here