16 ஆண்டு உண்ணாவிரதம் தோல்வியில் முடிந்தது...மனித உரிமை ஆர்வலர் இரோம் சானு சர்மிளா. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

16 ஆண்டு உண்ணாவிரதம் தோல்வியில் முடிந்தது...மனித உரிமை ஆர்வலர் இரோம் சானு சர்மிளா.

16 ஆண்டு கால தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறார் மனித உரிமை ஆர்வலர் இரோம் சானு சர்மிளா

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி மனித உரிமை ஆர்வலர் இரோம் சானு சர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 42 வயதான அவர்  உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மூலம் உயிர் வாழ்ந்து வரும் அவர் பல முறை கைது செய்யப்பட்டும், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார் .

கடந்த 2000 மாம் ஆண்டு, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களுக்கு AFSPA எனப்படும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் பாதுகாப்பு வழங்கியது.

இச்சட்டத்தை எதிர்த்து மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இரோம் சர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இவ்வளவு ஆண்டுகளாக போராடியும் அரசு தனது கோரிக்கையை கண்டுகொள்ளாததையடுத்து, உண்ணாவிரதத்தை ஆகஸ்ட் மாதம் முடித்துக் கொள்ளப் போவதாகவும், தேர்தலில் போட்டியிட்டு இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here