மாலை செய்திகள ்25/07/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்திகள ்25/07/2016

இன்றைய செய்திகள்
                  
               💥💥25/7/16💥💥

💥💥💥💥💥💥💥💥💥💥💥


💥காவல்துறையினர் குவிப்பு-அதிரடி படையினர் ஐகோர்ட் வளாகத்தை சுற்றி திரண்டு நிற்கும் நிலையில் எந்த நிமிடமும் வழக்கறிஞர்கள் உள்ளே நுழையும் முயற்சியில் ஈடுபட்டால் வழக்கறிஞர்கள் - காவல் துறை மோதல் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதால் அதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசின் பிரதிநிதிகள் குழுபோராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


💥அமெரிக்காவின் டெக்சஸ் மாநில அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு. துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை, 2 பெண்கள் குண்டு பாய்ந்து பலி. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்

💥காஞ்சிபுரம் - தேவிரிம்பாக்கம் - தாழம்பட்டு  அருகே காஞ்சிபுரத்தில்  இருந்து தாம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தலைகீழாக பள்ளத்தில் கவிந்து விபத்து. பேருந்தில் பயணம் செய்த பெங்களூரை சேர்ந்த  திவ்யா மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த ரவிசந்திரன்  ஆகிய இருவர்  பலி. படுகாயமடைந்த 34 -பேர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு  மருத்துவமனையில் அனுமதி. இரவு மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் எஸ்பி முத்தரசி சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

💥வெள்ள நிலைமை ஞாயிறன்று அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடுமையான உயர்ந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர், ஏற்கனவே 6 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநிலத்தில் சுமார் 6 லட்சம் மக்களும், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சுமார் 100 குடும்பங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்பில் கோல்பாரா மற்றும் தின்சுகியா மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

💥'சாவன்' என்று அழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து, ”காவட்” மூலம் புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது இவர்களுக்கு பழக்கம். இதனையடுத்து சவான் புனித மாதம் தொடங்கி, முதல் திங்கட்கிழமையான இன்று பக்தர்கள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அலகாபாத், வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் இன்று அதிகாலை முதல் கோவிலுக்கு வெளியே வரிசையில் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.


💥ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க சில நிபந்தனைகளை விதித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில். ஊக்க மருந்து பயன்படுத்தி சர்வதேச தடை பெற்றவர்கள், தேசிய அளவில் ஊக்க மருந்து சோதனையில் பிடிபட்டவர்களுக்கு அனுமதி இல்லை. மேலும், கூடுதல் ஊக்க மருந்து சோதனைக்கு உட்பட சம்மதிப்பவர்களுக்கு அனுமதி என்று நிபந்தனை.

💥பஞ்சாப் மாநில பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான நவஜோத் சிங் சித்து சமீபத்தில் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அவர் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அம்மாநில பா.ஜ.க தலைவர் மறுத்துள்ளார். இன்னும் சித்து பா.ஜ.க.,வில் நீடிப்பதாக கூறியுள்ளார்.

💥2012-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருந்த அப்துல் கலாம் மக்களுக்காக எழுதிய கடிதம் வெளியாகாமல் இருந்தது. தற்போது, அவரின் உதவியாளர் ஶ்ரீஜன் பால் சிங் எழுதிய புத்தகத்தில் உள்ள அந்த கடிதத்தின் பகுதி வெளியாகி இருக்கிறது. 'டியர் இந்தியன்ஸ்...' எனத் தொடங்கும் அந்த கடிதத்தின் ஆழம் அதிகம்.

💥கபாலி' படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே, முன்னணி சினிமா வலைத்தளம் ஒன்று படத்தை காட்சிக்கு காட்சி ட்விட்டரில் லைவ் அப்டேட் செய்துள்ளது. ரசிகர்கள் பலர் இதை நிறுத்தச்சொல்லியும் கேட்கவே இல்லையாம். இறுதியாக ரஜினியின் மகள் சவுந்தர்யா இதில் தலையிட்டதன் பின்னரே நிறுத்தியிருக்கிறார்கள்.

💥விமானப்படைக்கு சொந்தமாக ஏ.என். 32 ரக விமானம் சென்னையிலிருந்து, போர்ட் ப்ளேருக்கு செல்லும் போது 29 பேருடன் மாயமானது. விமானப்படை முதல் இஸ்ரோ வரை பலரும் தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கும் நிலையில், அந்த பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. 3 நாட்கள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. வானிலையும் மோசமாகி உள்ளது.

💥நேற்று நள்ளிரவு முதல்
கர்நாடகா அரசு பேருந்து ஊழியர்கள்
வேலை நிறுத்தம்!
ஒசூரில் மட்டும் கிட்டதட்ட 5000 ஆயிரம் பயணிகள் தவிப்பு என தகவல்

💥காஷ்மீர் கலவரத்தில் பெல்லட் துப்பாக்கிகளை மக்கள் மீது பிரயோகித்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பல பேர் பார்வை பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், காஷ்மீர் பயணத்திற்குப் பின் பேசிய ராஜ்நாத் சிங், 'கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளேன்' எனக் கூறினார்.


💥வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தில் மழை மாரியம்மன் கோவில் நடைபெற்ற தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி  சிறுவன் உயிரிழப்பு.

💥சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 65-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 17-வது நுழைவு வாயில் இருந்த கண்ணாடி உடைந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

💥ஜெர்மனி, ஆன்ஸ்பக் நகரம், பவேரிய பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் நேற்று இரவு குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளனர் மற்றும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று ஜெர்மனி போலீசார் தகவல் அளித்துள்ளனர்.  

💥கேரள மாநிலம் திருச்சூரில் மேலும் ஒரு மாவோயிஸ்ட்டை கியூ பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் நொண்டிமாகாளியை ரகசிய இடத்தில் விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

💥சென்னையில் வக்கீல்கள் தீக்குளிக்க முயற்சி

💥தமிழக சட்டசபை இன்று
மீண்டும் கூடியது

💥உத்திரபிரதேசத்தில் வேன் மீது ரயில் மோதியதில் 7 குழந்தைகள் உயிரிழப்பு

💥சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு போனில் பேசிய நபர், ‘ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படத்துக்கு சென்னையில் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே தஞ்சையில் உள்ள கோயில்களில் இன்னும் சில நேரங்களில் வெடிகுண்டு வெடிக்கும்’’ என்று மிரட்டல் விடுத்தார்.

💥மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 1000க்கும் மேற்பட்ட போலீசார் உயர்நீதிமன்றதிற்கு பாதுகாப்பு

💥திருத்தணி அடுத்த அம்மையார்க்குப்பத்தில் இயங்கி வரும் இந்தியா வங்கியில் மின் கசிவினால் தீ விபத்து.

💥திட்டமிட்டபடி உயர்நீதிமன்றம் முற்றுகையிடப்படும் : தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன்

💥வழக்கறிஞர்கள் பேரணி தொடங்கியதையடுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நிறுத்தம்.

💥பாரிமுனையில் வழக்கறிஞர்கள் பேரணியை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது போலீஸ்.

💥மான் வேட்டையாடிய வழக்கில் இருந்து நடிகர் சல்மான்கான் விடுதலை

💥ரஜினி மகளை கடுப்பேற்றிய 'கபாலி' அப்டேட்ஸ்!

'கபாலி' படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே, முன்னணி சினிமா வலைத்தளம் ஒன்று படத்தை காட்சிக்கு காட்சி ட்விட்டரில் லைவ் அப்டேட் செய்துள்ளது. ரசிகர்கள் பலர் இதை நிறுத்தச்சொல்லியும் கேட்கவே இல்லையாம். இறுதியாக ரஜினியின் மகள் சவுந்தர்யா இதில் தலையிட்டதன் பின்னரே நிறுத்தியிருக்கிறார்கள்.


💥இன்னும் பா.ஜ.க.,வில் இருக்கிறார் சித்து

பஞ்சாப் மாநில பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான நவஜோத் சிங் சித்து சமீபத்தில் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அவர் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அம்மாநில பா.ஜ.க தலைவர் மறுத்துள்ளார். இன்னும் சித்து பா.ஜ.க.,வில் நீடிப்பதாக கூறியுள்ளார்.

💥ஒலிம்பிக்கில் நிபந்தனைகளுடன் ரஷ்யாவுக்கு அனுமதி

ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க சில நிபந்தனைகளை விதித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில். ஊக்க மருந்து பயன்படுத்தி சர்வதேச தடை பெற்றவர்கள், தேசிய அளவில் ஊக்க மருந்து சோதனையில் பிடிபட்டவர்களுக்கு அனுமதி இல்லை. மேலும், கூடுதல் ஊக்க மருந்து சோதனைக்கு உட்பட சம்மதிப்பவர்களுக்கு அனுமதி என்று நிபந்தனை.

💥சாவன்' புனித மாதம்: அதிகாலை முதல் சிவபெருமானுக்கு அபிஷேகம் பக்தர்கள்

'சாவன்' என்று அழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து, ”காவட்” மூலம் புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது இவர்களுக்கு பழக்கம். இதனையடுத்து சவான் புனித மாதம் தொடங்கி, முதல் திங்கட்கிழமையான இன்று பக்தர்கள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அலகாபாத், வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் இன்று அதிகாலை முதல் கோவிலுக்கு வெளியே வரிசையில் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

💥வக்கீல்கள் - பத்திரிகையாளர் மோதல் குறித்து நீதி விசாரணை: கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்  

கொச்சியை சேர்ந்த அரசு வழக்கறிஞர் மனேஷ் மாத்யூ சில நாட்களுக்கு முன் கொச்சியில்   இளம் பெண்ணை கையை  பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இது ெதாடர்பாக   அந்த பெண்  பாலாரிவட்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மனேஷ் மாத்யூ மீது  வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக செய்தி சேகரிக்க   சென்ற நிருபர்களை வக்கீல்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பல நீதிமன்றங்களிலும் பத்திரிகையாளர்களை உள்ளே விட  மறுத்தனர். பத்திரிகையாளர் அறைகளுக்கு வக்கீல்கள் பூட்டு போட்டனர். 

மறுநாள் திருவனந்தபுரம் வஞ்சியூர் நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை  வக்கீல்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.  இதில் நிருபர்கள், பொதுமக்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்நிலையில்  இரு தரப்பிற்கும் இடையே சமாதான பேச்சு நடத்த கேரள முதல்வர் பினராய்  விஜயன் நேற்று கொச்சி வந்தார். கொச்சியில் உயர்நீதிமன்ற வக்கீல் சங்கத்தினருடனும்  பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.  

💥1200 போலீஸ் பாதுகாப்பு :

வழக்கறிஞர்கள் சட்டத்தில் ஐகோர்ட் கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து இன்று காலை  வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் சுற்றி உள்ள 7 நுழைவுவாயிலிலும், அதனை சுற்றியும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயர்நீதிமன்றத்திற்குள் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 750 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து வாயில்களிலும் கண்ணீர்புகை வீசும் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் உள்ளே வரும் வாகனங்கள், நபர்கள், வழக்கறிஞர்கள் அடையாள அட்டை சோதித்த பின்னரே உள்ளே செல்ல  அனுமதிக்கப்படுகின்றனர்.

💥தருமபுரி
Atm  மையங்களில் பணம் எடுத்து வருபவர்களை வழிமறித்து கொள்ளை அடிக்கும் திருச்சியை சேர்ந்த விஜயகுமார் சிவா ஆகிய இருவரையும் அரூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து1.இலட்சத்து50.ஆயிரம் ரூபாய் பறிமுதல்.

💥உத்திர பிரதேச மாநிலம் பதோகியில் வேன் மீது ரயில் மோதியதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.


💥வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தில் மழை மாரியம்மன் கோவில் நடைபெற்ற தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி  சிறுவன் உயிரிழப்பு.



💥65 வது முறையாக சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நுழைவு வாயில் 17 வது கேட் கண்ணாடி உடைந்தது.

💥திருத்தணி அடுத்த அம்மையார்க்குப்பத்தில் இயங்கி வரும் இந்தியா வங்கியில் மின் கசிவினால் தீ விபத்து.

💥திட்டமிட்டபடி உயர்நீதிமன்றம் முற்றுகையிடப்படும் : தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன்

💥பாரிமுனையில் வழக்கறிஞர்கள் பேரணியை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது போலீஸ்.

💥சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு போனில் பேசிய நபர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படத்துக்கு சென்னையில் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே தஞ்சையில் உள்ள கோயில்களில் இன்னும் சில நேரங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.

💥தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் 24 காரட் 1கிராம்
3120.00

தங்கம் 22 காரட்  1கிராம்
2917.00

வெள்ளி 1கிராம்
50.50

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here