http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
karuppasamyp14@gmail.com
இன்றைய செய்திகள்
27/7/2016
@ ஜீலை 27 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் பொது மக்கள் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
@ ரியோ ஒலிம்பிக் போட்டி: நரசிங் யாதவ்விற்குப் பதிலாக பிரவீண் ராணா தேர்வு
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ள மல்யுத்த வீரர் நரசிங் யாதவ்விற்குப் பதிலாக மற்றொரு இந்திய வீரர் பிரவீண் ராணா (74 கிலோ கிராம்) ரியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்பட்டவர் நரசிங் யாதவ், இவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனையடுத்து அவர் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
@ ஒசூரில் காமராஜர்நகர் ஏரி உடைந்தது
ஒசூர்: ஓசூரில் பெய்த கனமழை காரணமாக நிரம்பிய காமராஜர்நகர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
@ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்
திருவண்ணாமலை: ஆடிப் பிரம்மோற்சவத்தை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றப்பட்டுள்ளது. கொடியேற்றத்தை தொடர்ந்து காலை மற்றும் மாலையில் நான்கு மாடவீதிகளில் சாமி வீதியுலா வரவுள்ளது.
@ சிறார் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது
புதுடில்லி : 14 வயதிற்குட்பட்ட சிறார்களை பணியில் அமர்த்தினால் இனி 2 வருடம் வரை சிறைதண்டனை விதிக்க வகையும் சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.இச்சட்ட திருத்த மசோதாவின் படி, 14 வயதிற்குட்பட்ட சிறார்களைப் பணியில் அமர்த்துவோருக்கு இனி 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்
@ சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது, மத்திய அரசு.
@ ஓசூரில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்தில் 14.1 செ.மீ மழை வெளுத்துக்கட்டியது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தாய், மகள் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
@ தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
@ சட்டப்பேரவையில் கம்யூனிஸக் கொள்கைகள் ஒலிக்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
@ தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் தொடர்பாக இலங்கையுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்--ராமதாஸ
@ நோக்கியா, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை மீண்டும் தமிழகத்துக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் தொழில்துறை அமைச்சர் சம்பத் கூறினார்.
@ சாதாரண ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் சமூக சேவகர் பியூஷ் மனுஷ் மீது ஏன் இவ்வளவு வன்மம்? என திமுக தலைவர் கருணாநதி கேள்வி எழுப்பியுள்ளார்.
@ பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால், மீறி மது அருந்துவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தையே சிறையில் அடைக்க புதிய சட்டம் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
@ பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்--சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே
@ மக்களை ஏமாற்றி வரும் ஜோதிடர்களை கட்டுப்படுத்தும் மூடநம்பிக்கை தடுப்பு சட்டம் கண்டிப்பாக கொண்டுவரப்படும் --முதல்வர் சித்தராமையா
@ அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
@ பிரான்சின் வடக்கு பகுதியில் தேவாலயம் ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த இரண்டு பேர், அங்கிருந்த பாதிரியார், 2 கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 5 பேரை ஆயுத முனையில் பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர். போலீசார் நடத்திய தாக்குதலில், அந்த இரண்டு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
@ தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் செல்லாது என இந்திய அரசு அறிவித்தது நியாயமற்றது என்று நெதர்லாந்தின் உள்ள சர்வதேசத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
@ இந்தியா, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்களுக்கு சர்வதேச சந்தையில் உள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இவ்வகை சாதனங்களுக்கான சுங்க வரிகளை நீக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
@ சரக்கு-சேவை வரி விதிப்பு: மத்திய, மாநில அரசுகளிடையே கருத்தொற்றுமை
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா விவகாரத்தில் முக்கியத் திருப்பமாக, தற்போது நிர்ணயித்துள்ள வரியை விட குறைவான வரியை விதிப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கொள்கை அளவில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
மதிப்புக் கூட்டு வரி உள்பட அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை வசூலிக்கும் வகையில், சரக்கு-சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
@ மாற்றுத் திறனாளிகள் சங்கம்: ஆக.5 இல் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி மாத உதவித் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 5-இல் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
@ அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவரின் பிறந்தநாளை பள்ளி வளாகத்திலேயே 12 மாணவர்கள் மது அருந்தி கொண்டாடி, வகுப்பறைக்கு போதையில் வந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
@ மீனவர் பிரச்னை: இலங்கையுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் தொடர்பாக இலங்கையுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
@ வணிகர் சங்க பேரமைப்பினர் ஏடிஜிபியிடம் மனு
தமிழகத்தில் வணிகர்கள் மீது வன்முறை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக காவல்துறை ஏடிஜிபி ஜே.கே.திரிபாதியிடம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செவ்வாய்க்கிழமை நேரில் மனு அளித்தார்.
📡அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரிய வழக்கு: பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
📡விருந்தினர் மாளிகைக்குள் புகுந்த சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி
திருமலையில் விருந்தினர் மாளிகைக்குள் திங்கள்கிழமை இரவு சிறுத்தை புகுந்ததைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியில் அலறிக் கூச்சலிட்டனர்.
திருமலையில் பத்மாவதி விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள நரசிங்க சதன் விருந்தினர் மாளிகையில் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர் ஒருவர் சிறுத்தை ஒன்று கீழ் தளத்திலிருந்து முதல் தளத்துக்கு செல்வதைக் கண்டார்.
உடனே அவர் "சிறுத்தை, சிறுத்தை' என்று அலறிக் கூச்சலிட்டார். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவித்தார். உடனே தேவஸ்தான வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுத்தையைப் பிடிக்க முயன்றனர்.
தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாச ராவும் அங்கு சென்றார். அப்பகுதியில் அறைகளில் தங்கியிருந்த பக்தர்களை அறையை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரித்தார்.
📡தைவானில் இருந்து வந்த விமானத்தில் 'பாம்பு' பார்சல்..சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !
சென்னை: தைவானில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு அஞ்சல் பார்சலை விமான நிலையத்தில், அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதில் இருந்ததால் ஆடிப்போன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
http://www.sivakasiteacherkaruppasamy.bloblogspot.com
📡இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவு
புதுடில்லி : தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் செல்லாது என இந்திய அரசு அறிவித்தது நியாயமற்றது என்று நெதர்லாந்தின் உள்ள சர்வதேசத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
📡சுங்க வரியை நீக்க இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை
புதுடில்லி : இந்தியா, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்களுக்கு சர்வதேச சந்தையில் உள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இவ்வகை சாதனங்களுக்கான சுங்க வரிகளை நீக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க வர்த்தக துறையின் துணை பிரதிநிதி ராபர்ட் ஹோலிமென் பேசியதாவது: உலகளவில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்களுக்கு, இரண்டு லட்சம் கோடி டாலர் அளவிற்கு, சந்தை வாய்ப்பு உள்ளது. இது, இந்தியாவில், 6,500 கோடி டாலர் என்ற அளவிற்கு மிகக் குறைவாக உள்ளது. இந்தியா, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்களுக்கு சர்வதேச சந்தையில் உள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
📡லஞ்சம், ஊழல், தீண்டாமையை ஒழிக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்: மேகாலய மாநில ஆளுநர்
நாட்டில் லஞ்சம், ஊழல், தீண்டாமையை ஒழிக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என மேகாலய மாநில ஆளுநர் வி.சண்முகநாதன் அறிவுறுத்தினார்.
குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் திருவுருவ வெண்கலச் சிலை திறப்பு விழா வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதனைத் திறந்து வைத்து, வி.சண்முகநாதன் பேசியதாவது:
📡மோரீஷஸ் திருவள்ளுவர் சிலை: குமரி அனந்தன் மரியாதை
மோரீஷஸில் உள்ள மகாத்மா காந்தி கல்வி நிலையத்தில் நிறுவப்படவுள்ள திருவள்ளுவர் சிலைக்கு, சென்னை மெரீனா கடற்கரையில் குமரி அனந்தன், தமிழ் வளர்ச்சி துறை
அதிகாரிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
📡வழக்குரைஞர் சட்டத் திருத்தம் நிறுத்திவைப்பு
வழக்குரைஞர்கள் சட்ட விதிகளில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்கள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வழக்குரைஞர்கள் சட்டப் பிரிவு 34(1) வழங்கிய அதிகாரத்தின் கீழ், சென்னை உயர்நீதிமன்றம் அந்தச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது.
தமிழக அரசிதழிலும், மே 20-ஆம் தேதி புதிய திருத்தம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டன. இதில், விரும்பத்தகாத, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வழக்குரைஞர்கள் மீது நீதிமன்றமே நடவடிக்கை
எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
📡இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம்: நீதி ஆயோக் பரிசீலனை
இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவக் ஆணையத்தை அமைக்கலாம் என்று மத்தியக் கொள்கைக் குழு (நீதி ஆயோக்) பரிசிலித்து வருகிறது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நீதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது அதில், மருத்துவக் கல்வியை இந்திய மருத்துவக் கவுன்சில்
சிறப்பாக நிர்வகிக்காதது, அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
பிரதமரின் கூடுதல் தலைமைச் செயலர் பி.கே.மிஸ்ரா, நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், சுகாதாரத் துறை செயலாளர் பானு பிரதாப் சர்மா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
📡ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒடிசா வீராங்கனைகளுக்கு ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை-நவீன் பட்நாயக் அறிவிப்பு
📡பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பாரம்பரியமானது என்பதால் அப்போட்டிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "மாநிலத்தின் பழைமை வாய்ந்த மற்றும் பல நூற்றாண்டு கால வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது' என்று வாதிட்டார்.
📡16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை கைவிடுகிறார் இரோம் ஷர்மிளா
மணிப்பூர் மாநில உரிமைகளுக்காக போராடி வரும் இரோம் ஷர்மிளா (44), தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
இதன்படி, வரும் 9-ஆம் தேதி தனது போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ள அவர், மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார்.
📡ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்குப் பயன் செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டுஅமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 1 கோடி பேர் பயனடைவர். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வானது இனிமேல் செயல்திறன் அடிப்படையில்தான் வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வகையும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல்அளித்தது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.2.5 லட்சமாகவும் உயர்ந்தது. இந்த ஊதிய உயர்வு ஜனவரி 1-ஆம் தேதி முதல்
அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
📡அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு
பிலடெல்பியா : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
📡உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று மாலை ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் மேக மூட்டமாக காணப்பட்டது. இரவு 7 மணியளவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. 9 மணி வரை மழை வெளுத்து வாங்கியது. மழையால் மூக்கண்டப்பள்ளி, அன்னை சத்யா நகர், மஞ்சுநாத் நகர், ஈஸ்வர் நகர், ஜெய்நகர், கே.சி.சி நகர் மற்றும் ராம் நகர் பள்ளம் ஆகிய பகுதிகளில் வீடுகள், வர்த்தக கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
சாலையில் 2 அடி உயரத்துக்கு மேல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அன்னை சத்யா நகரில் இரண்டு பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதேபோல், அண்ணாநகரில் ஒருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து ஓசூர் சிப்காட் போலீசார் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எஸ்எம் காலனி அருகே 2 பெண்களின் சடலம் மற்றும் வாலிபரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் அன்னை சத்யா நகரசை சேர்ந்த வனிதா (40), அவரது மகள் தர்ஷிணி (20) என தெரிந்தது. அண்ணாநகரை சேர்ந்த நந்தகுமார் (26) சடலமும் மீட்கப்பட்டது. இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📡தக்காளி வேன் கவிழ்ந்து ஒருவர் பலி
சென்னை : கர்நாடகா மாநிலத்தில் இருந்து தி.நகர் மார்கெட்டுக்கு தக்காளி ஏற்றி கொண்டு வேன் ஒன்று வந்தது. இரவு 10.30 மணி அளவில் தி.நகர் கண்ணம்மாபேட்டை சுடுகாடு அருகே உள்ள வளைவில் திரும்பும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் ஓரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியின் மீது அமர்ந்திருந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், வேனின் அடியில் சிக்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் ஓட்டம் பிடித்தார்.
📡தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கிராம்
2939
24 காரட் 10கிராம்
31430
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
50900
பார் வெள்ளி 1 கிலோ
47610
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக