மாலை செய்திகள்
🙏🏻💐27\07\16💐🙏🏻
🙏🏻💐💐🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻💐💐🙏🏻
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
💐தமிழக காங்., தலைவராகிறார் ப.சிதம்பரம் ?
சென்னை : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக சட்டசபை தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தையும் அவர் கட்சி மேலிடத்திற்கு அனுப்பினார்.இளங்கோவனின் ராஜினாமாவை ஏற்பதாக கட்சி மேலிடமும் தெரிவித்தது. ஆனால் புதிய தலைவர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. தலைவர் பதவிக்கு வேறு ஆள் இல்லாததால் இளங்கோவனையே மீண்டும் தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை புதிய தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டிருப்பதாக புதிதாக தகவல் வெளியாகி உள்ளது.
💐அதிமுகவில் கருப்பசாமி பாண்டியன் நீடிப்பாரா?
சென்னை: திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 மாதங்களுக்குப் பின்னர் அதிமுகவில் இணைந்திருக்கிறார் கருப்பசாமி பாண்டியன் இணைந்திருக்கிறார். இதன்மூலம் திருநெல்வேலி மாவட்ட அதிமுகவில் மேலும் ஓர் அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் கருப்பசாமி பாண்டியன் இணைந்த வேகத்தில் அவரைப்பற்றிய புகார் கடிதங்கள் இப்போது வலம் வரத் தொடங்கியுள்தாம்.
15 நாட்களுக்கு முன், தி.மு.க தலைவருக்கு கருப்பசாமி பாண்டியன் எழுதியதாக கூறப்படும் உருக்கமான கடிதம், போயஸ் கார்டனுக்கு சென்றுள்ளதால் அதிமுகவில் 'கனா' எத்தனை நாட்கள் நீடிப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
💐ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதி மர்ம மரணம்
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் திருவருள்குமார் (36). இவர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் புறநகர் பகுதியில் தங்கியிருந்து, தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
💐5 வழக்கறிஞர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் - உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை: ஐகோர்ட் முற்றுகை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்களை விடுவிக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது
💐ஆரணி அருகே கிராம மக்கள் 300 பேர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ஆரணி: ஆரணி அருகே பாளைய ஏகாமநல்லூரில் கிராம மக்கள் 300 பேர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 100 நாள் வேலைத் திட்டத்தில் 3 மாதமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர்- திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலால் இருவழித்தடத்திலும் 3 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் தேங்கியுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
💐மாயமான விமானம் குறித்து எந்த தடையமும் சிக்காதது வருத்தம் அளிக்கிறது : மனோகர் பாரிக்கர்
ராமேஸ்வரம்: மாயமான விமானத்தை தேடும் பணி 6-வது நாளாக நீடிக்கும் நிலையில் இதுவரை எந்த தடையமும் சிக்காதது வருத்தம் அளிப்பதாக மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கவலை தெரிவித்துள்ளார்.
💐நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மீது புகார்
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மீது மாசாணிதேவி என்பவர் புகார் அளித்துள்ளார். ஆர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் சுகாதார பணிகள் இணை இயக்குனரிடம் புகார் அளிக்கப்பட்டது. பயிற்சி மருத்துவர் ஆர்த்தி தவறாக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஜூன் 28ல் அறுவை சிகிச்சை செய்த பின் தமக்கு வலது கண் பார்வை மங்கி விட்டது என்றும் மாசாணிதேவி கூறியுள்ளார்
💐அப்துல் கலாம் நினைவுநாள்! விஜயகாந்த் அஞ்சலி
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
அப்துல்கலாமின் முதலாமாண்டு நினைவுநாள் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தேமுதிக அலுவலகத்தில் கலாமின் உருவப்படத்திற்கு விஜயகாந்த் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
💐மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு !
சென்னை: மேற்கு மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், தமிழகத்தில் உள்பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய கூடும் என்றார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒசூரில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்த அவர், சென்னையில் மிக சில இடங்களில் மழை பெய்யும் என்றார்.
💐அவதூறு வழக்கு ரத்து: ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு
டெல்லி: அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2014ல் மகாராஷ்டிரா மாநிலம் திவாண்டியில் நடந்த கூட்டத்தில் ராகுல் அவதூறாக பேசியதாக புகார் கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ததிருந்தார்.
💐பெண் மாவோயிஸ்ட்க்கு 3 நாள் போலீஸ் காவல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ஜாஸ் மேரிக்கு 3 நாள் போலீஸ் காவல் அளித்து உத்திரமேரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோமங்கலத்தில் கல்குவாரியில் வேலை செய்த பெண் மாவோயிஸ்ட் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
💐இஸ்பத் நிறுவனத்துக்கு தனியாக ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரதி ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் நிலக்கரியை வெட்டி எடுக்கும் உரிமத்தை முறைகேடாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு இன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரதி ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் ரதி, தலைமை செயல் அதிகாரி உதித் ரதி, உதவி பொது மேலாளர் குஷால் அகர்வால் ஆகியோரை குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி பாரத் பிரசார், கோர்ட்டில் ஆஜராகி இருந்த அவர்கள் மூன்று பேரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அந்நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் குஷால் அகர்வால் என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
💐அவினாசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை
அவினாசி: அவினாசி, சேவூர், பழங்கரை, ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
💐மதுராந்தகம் அருகே பிடிபட்ட 360 பாம்புகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது
சென்னை: மதுராந்தகம் அருகே பிடிபட்ட 360 பாம்புகள் சென்னை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பிடிக்கப்பட்ட பாம்புகள் பாதுகாப்புடன் வேளச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன.
💐தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் உள்பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேற்கு மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிற பகுதிகளில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
💐செல்போன் கோபுரத்தில் 20க்கும் மேற்பட்டோர் ஏறி போராட்டம்
திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அருகே முருகம்பட்டு கிராமத்தில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தில் மேல் அக்கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஏறி போராட்டம் நடத்தினர். அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக திருத்தணி திருப்பதி நெடுஞ்சாலையில் அக்கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
💐வாழப்பாடி ஒன்றிய வி.சி.க பொறுப்பாளர் விஷ மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி
சேலம்: வாழப்பாடி ஒன்றிய வி.சி.க பொறுப்பாளர் விஷ மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். ஆபத்தான நிலையில் வி.சி.கட்சிப் பொறுப்பாளர் மாயக்கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் உதயகுமார் மிரட்டியதால் மாயக்கண்ணன் தற்கொலைக்கு முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. மன்னார்பாளையம் மாயக்கண்ணன் புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
💐பல்லாவரத்தில் கள்ள நோட்டு பறிமுதல்: ஒருவர் கைது
சென்னை : சென்னை பல்லாவரத்தில் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்க தரப்பட்ட கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1000 மதிப்புள்ள கள்ள நோட்டை மாற்ற முயற்சித்த மேற்குவங்கத்தை சேர்ந்த மஜீத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
💐வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 47 புள்ளிகள் உயர்வு
மும்பை: வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 47 புள்ளிகள் உயர்ந்து 28,024 புள்ளிகளாக உள்ளது. நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 8,615 புள்ளிகளாக உள்ளது.
💐தேவகோட்டை பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவியப்போட்டி... வென்றோருக்கு பரிசு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
💐உத்தர்கண்டில் சீனா ஊடுருவல்
டேராடூன்: உத்தர்கண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பாராஹோட்டிக்குள் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஊடுருவியுள்ளதை முதல்வர் ஹாரீஸ் ராவத் உறுதி செய்துள்ளார்.அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளையும், லடாக்கில் சில பகுதிகளையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அப்பகுதிக்குள் சீன ராணுவம் பல முறை ஊடுருவியுள்ளது. இதற்கு இந்தியா பல முறை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 9ம் தேதி அருணாச்சல பிரதேசத்திற்குள் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி, சீன ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பாராஹோட்டிக்குள் ஊடுருவியது தெரியவந்துள்ளது.
💐நரசிங் ஒலிம்பிக் வாய்ப்பு தகர்ந்தது
புதுடில்லி: இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது.
இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ், 26. டில்லி காமன்வெல்த்தில் (2010) தங்கம், 2014 ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றவர்.2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கி.கி., பிரிவு) வெண்கலம் வென்று, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு (ஆக.,5-21) நேரடியாக தகுதி பெற்றார்.
ஊக்கமருந்து:
இந்நிலையில் இவர், தடை செய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. 'ஏ,பி' என இரு சிறுநீர் மாதிரிகளிலும் இது உறுதியாக, ஒலிம்பிக் வாய்ப்பு சிக்கலானது. தொடர்ந்து ஜூலை 5ல் இரண்டாவது முறையாக 'ஏ','பி' மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதிலும், ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியானதால், ஒலிம்பிக் வாய்ப்பு தகர்ந்தது.
இவரது உணவில் மர்ம நபர் ஒருவர் ஊக்கமருந்தை கலந்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நரசிங், சோனாபட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், உணவில் எவ்விதமான கலப்படமும் இல்லை என தெரியவந்துள்ளது.
💐ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானை தாட்சாயணி : கின்னஸ் புத்தகத்தில் இடம்
திருவனந்தபுரம்: ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானை என்ற பெருமையை திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் தாட்சாயணி யானை அடைந்துள்ளது. இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த யானைக்கு திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 85 வயதான தாட்சாயணிக்கு யானைகளின் பாட்டி என்ற பட்டம் சூட்டப்பட்டது. அலங்கார அங்கி அணிவிக்கப்பட்டு தாட்சாயணி யானை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.
💐இளம்பெண் கடத்தல் போலீஸ் விசாரணை
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, இளம்பெண் கடத்தப்பட்டார். திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த, காளிபட்டி புதுபாவடி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமாரின், 16 வயது மகள். இவர், கடந்த, 10 நாட்களுக்கு முன், பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் அவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனவே, தன் மகளை, அதே தெருவை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ், 25, என்பவர் கடத்திச் சென்றதாக, மல்லசமுத்திரம் போலீசில் பெற்றோர் புகார் செய்துள்ளனர். அதன் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
💐தீக்காயமடைந்த பெண் சாவு
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே உள்ள மகாராஜபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கணேசன் மனைவி அருள்தேவி (26). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஜூன் 11ம் தேதி இரவு பால் காய்ச்சுவதற்கு ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது ஸ்டவ் வெடித்ததில் அருள்தேவி மீது தீபரவி உடல் முழுவதும் பரவியது. உடனடியாக அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் திருவாரூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
💐நாகூர் - காரைக்கால் பயணிகள் சிறப்பு ரயில் அக்டோபர் வரை நீட்டிப்பு
நாகூர்- காரைக்கால் இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் சிறப்பு ரயில் அக்டோபர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக அறிவிப்பு:
நாகூர் - காரைக்கால் இடையே பரீட்சார்த்த முறையில் பயணிகள் சிறப்பு ரயில் (எண் 06851-06852) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜூலை 31-ம் தேதி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, இந்த ரயில் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரையில் இயக்கப்படும். எனவே தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் இந்த பயணிகள் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
💐தமிழகம் முழுவதும் 44 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம் - சென்னையில் புதிய உதவி கமிஷனர்கள் நியமனம்
தமிழகம் முழுவதும் 44 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர். சென்னையில் உதவி கமிஷனர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. அசோக்குமார் நேற்று பிறப்பித்தார்.
💐காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு; சுமுகமாக பேசி பிரிந்தார்கள்
💐கர்நாடகாவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ:
3 பயணிகள் பலி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹப்பள்ளி நகரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீப்பற்றியதில் அதில் பயணம் செய்த 3 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
💐பைக் பள்ளத்தில் பாய்ந்து கல்லூரி மாணவர் சாவு
சங்கரன்கோவில் அருகே பைக் பள்ளத்தில் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
சங்கரன்கோவில் காயிதே மில்லத் 2 ஆம் தெருவைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் நவாஸ்கான் (18). இவர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை சங்கரன்கோவிலிலிருந்து கல்லூரிக்கு பைக்கில் சென்றாராம். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் மகன் இம்ரான் (17), அப்துல்லா மகன் திவான்அலி(18) ஆகியோரும் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றனராம்.
கரிசல்குளம் விலக்கு அருகே சென்றபோது பைக் நிலைதடுமாறி பள்ளத்தில் பாய்ந்ததில் நவாஸ்கான் பலத்த காயம் அடைந்து இறந்தார். இம்ரான், திவான்அலி ஆகியோரும் காயமடைந்தனர். விபத்து குறித்து திருவேங்கடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
💐ம.பி.,யில் போலீஸ் முன் பெண்கள் மீது தாக்குதல்
போபால்: குஜராத்தில் மாட்டுத்தோல் வைத்திருந்ததாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள், மத்திய பிரதேச மாநிலம் மண்டசாவூர் பகுதியில் இரண்டு இஸ்லாமிய பெண்கள் மாட்டுத்தோல் வைத்திருந்ததாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவில் போலீசார் முன்னிலையில், சல்மா இஸ்மாயில் மேவதி(30) ஷமீம் அக்தர் ஹூசைன்(35) ஆகியோரை சில பெண்கள் தாக்குகின்றனர். அவர்களை போலீசார் தடுக்காததும் பதிவாகியுள்ளது.
💐இடைநீக்கம் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்கள் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள 5 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் - வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்..
💐தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்: அற்புதம்மாள் வரவேற்பு
ராஜீவகாந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதற்கு அற்புதம்மாள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
💐புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு நூதன முறையில் மது பாட்டில்கள் கடத்தல்
பிளாஸ்டிக் முட்டை தயாரித்து அதனை வாகனத்தில் பார்வைக்கு வைத்துவிட்டு உட்பகுதியில் 3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் புதுச்சேரிக்கு கடத்த முயன்ற போது கடலூர் சாவடி சோதனை சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.ஒருவர் கைது
💐போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக வழக்கறிஞர்கள் ஆலோசனை
போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் கூடியுள்ளது. வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் அறிவழகன் தலைமையில் பொதுக் குழு கூட்டம் கூடியது.
💐சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை தடுத்த நிறுத்த கருணாநிதி வலியுறுத்தல்
சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி சேலம் உருக்காலை மீது மத்திய அரசு கைவைக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
💐வடகிழக்கு சிரியா குர்திஷ் நகரத்தில் குண்டு வெடித்து 44 பேர் பலி
வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் நகரத்தில் குண்டு வெடித்து 44 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
💐இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும்: வழக்கறிஞர்கள் எச்சரிக்கை
சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறாவிட்டால் இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளனர். தமிழக வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக டெல்லியில் ஏற்கனவே போராட்டம் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
💐தினம் தினம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட்டுவிட்டு, தனது தோழி நீத்தா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளார் மோடி என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்..
💐டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் கிரண் பேடி சந்திப்பு
டெல்லியில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி ரானியை புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சந்தித்தார். புதுச்சேரியில் நிலவும் ஜவுளி ஆலை பிரச்சனைகளை தீர்க்க ஸ்மிருதி ரானியிடம் கிரண் பேடி வலியுறுத்தினார். மேலும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவை சந்தித்த கிரண் பேடி புதுச்சேரியில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்தினார்.
💐5 வக்கீல்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்: வக்கீல்கள் சங்கத் செயலர் தகவல்
கைது செய்யப்பட்ட 5 வக்கீல்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை தொடர சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற அவசர பொதுக்குழுவுக்கு பின் வக்கீல்கள் அறிவித்துள்ளனர். அவரச பொதுக்குழுவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத் செயலர் இத்தகவல் தெரிவித்துள்ளார்.
💐 சென்னையில் இருந்து மதுரைக்கு 28 பேருடன் சென்ற விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் சென்னையில் விமானம் தரையிறக்கபட்டது.
💐திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மாசானதேவி என்ற பெண் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்ததில் வலது கண் பார்வை போனதாக திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்.
💐தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 27-ம் தேதி) சவரனுக்கு ரூ.40 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,934-க்கும், சவரனுக்கு ரூ.40 சரிந்து ரூ.23,472-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.50 சரிந்து ரூ.31,380-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் சரிந்து ரூ.50.70-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.240 சரிந்து ரூ.47,370-க்கும் விற்பனையாகிறது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🙏🏻🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக