7 வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல்...மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம்..... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

7 வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல்...மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம்.....

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை கள் அடுத்த மாதம் முதல் அமல் படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2015 நவம்பரில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம்அளித்தது. மிக குறைந்த அளவில் ஊதி யத்தை உயர்த்த கமிஷன் பரிந்துரை செய்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே பரிந்துரைகளை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையில் செயலர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை அண்மையில் அரசிடம் சமர்ப்பித்தது. அவற்றைப் பரிசீலித்த மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் இறுதி யில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு நேற்று அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும். இதன் மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 53 லட்சம் ஓய்வூதிய தாரர்களும் பலன் அடைவார்கள். அகவிலைப்படி உயர்வு தொகை இன்னமும் இறுதி செய் யப்படவில்லை. இதுகுறித்து சிறப்பு குழு ஆய்வு நடத்தி வருகிறது. இந்த குழு 4 மாதங்களில் தனது அறிக்கையை அளிக்கும். அதுவரை பழைய வரையறைகளின்படியே ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும். கடந்த ஜனவரி 1-ம் தேதியை கணக்கிட்டு இந்த பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டுள்ளது. அதன் படி நிலுவைத் தொகை அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் வழங்கப் படும். முக்கிய அம்சங்கள் 7-வது ஊதிய கமிஷனின் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஒட்டுமொத்தமாக 23.55 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும். குறைந்தபட்ச அடிப்படை மாத ஊதியம் ரூ.7,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட் டுள்ளது. அதிகபட்ச அடிப்படை மாத ஊதியம் ரூ.90,000-ல் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், ஓய்வூதிய ஒழுங்கு முறை ஆணையம், விமான நிலையங்கள் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட ஆணை யங்களின் தலைவர்களுக்கு மாதம் ரூ.4.5 லட்சம் ஊதியம் வழங்கப்படும். இந்த ஆணையங் களின் உறுப்பினர்களுக்கு ரூ.4 லட்சம் ஊதியம் அளிக்கப்படும். ஊதிய முரண்பாடுகளைக் களைய துறைவாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல் செய்வதால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவு ஏற்படும். ஊதிய உயர்வு கிடையாது 7-வது ஊதிய கமிஷன் அளித்த அறிக்கையில், பணியில் சிறப்பாகச் செயல்படாத ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கக் கூடாது என்று பரிந்துரை செய்யப் பட்டிருந்தது. இதனை மத்திய அரசு அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு இனிமேல் அவர்களின் செயல் திறன் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆய்வில் சிறந்த ஊழியர்கள் முதல் மிகச் சிறந்த ஊழியர்கள் என வகைப்படுத்தப்படுவார்கள். அதற் கேற்ப அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். மேலும் செயல்படாத ஊழியர் களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. -பிடிஐ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here