28/07/2016 மதிய செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

28/07/2016 மதிய செய்திகள்

             

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

📻சிறுத்தை நடமாட்டத்தால் குன்னூரில் தேயிலை தொழிலாளர்கள் அச்சம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கரோலினா எஸ்டேட்டில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அதனை பட்டாசு வெடித்து வனதுறையினர் விரட்டினர். இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை உலா வருவதாக தேயிலை தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

📻தமிழக அரசு மட்டும் இவ்வளவு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்வது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: தமிழக அரசு மட்டும் இவ்வளவு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்வது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மற்ற மாநில அரசுகளை விமர்சிக்கும் எதிர்கட்சிகள் மீது இது போல் அவதூறு வழக்கு தாக்கல் ஆவதில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

📻காசியாபாத்தில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை: உறவினர்கள் ஆசிரியர்களை தாக்கியதால் பரபரப்பு

காசியாபாத்: உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பள்ளி கட்டணம் கட்டாததால் தந்தையை அவமானப்படுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மாணவியின் உறவினர்கள் காசியாபாத் காவல் நிலையத்தில் ஆசிரியர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

📻59 ஆயிரம் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 59 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாலையோரத்தில் வசித்தவர்களுக்கு பெரும்பாக்கம் பகுதியில் 1,992 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. ஒரகடம் பகுதியில் 2,048 வீடுகளும், ஒக்கியம் துரைபாக்கியம் பகுதியில் 5896 வீடுகளும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன எனக்கூறினார்.

📻போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம்: அமைச்சர் தகவல்

சென்னை: சட்டசபையில் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அளித்த பதிலில் ஊதிய உயர்வால் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இயலவில்லை. ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்ததாலும், நிலுவையில் உள்ளவர்களுக்கு வழங்க இயலவில்லை. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கு ரூ.1,446 கோடி ஒதுக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி காலத்தில் ரூ.962 கோடி ஒதுக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியை விட்டு சென்ற போது ரூ.922 கோடி நிலுவை வைத்து விட்டு சென்றது. ஓய்வூதிய நிலுவையையும் அதிமுக ஆட்சி நிவர்த்தி செய்தது எனக்கூறினார்.

📻ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 விமானங்களுடன் விரிவாக்கம்!

ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 புதிய விமானங்களுடன் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஹைதராபாதில் ஏர் இந்தியா நிறுவன பொது மேலாளர் (நடவடிக்கை) என். சிவராம கிருஷ்ணண் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 புதிய விமானங்களுடன் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில், 500 புதிய விமானிகளை பணிக்குத் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையிலும், புதிதாக 250 விமானிகள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

📻அனுமதியின்றி வைக்கப்பட்ட அப்துல்கலாம் சிலை அகற்றம்!

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாற்று ரோட்டில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் நுழைவுவாயில் முன்பு மஞ்சாக்குப்பம் இளைஞர்கள் மன்றம் சார்பில் 4 அடி உயர பீடம் அமைக்கப்பட்டு அதில் 2 அடி உயர அப்துல்கலாம் சிலை அமைக்கப்பட்டது.

அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி இன்று அந்த சிலை திறக்கப்பட்டது. இதனிடையே அனுமதியின்றி இந்த சிலை வைக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் அன்பழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன், கிராம நிர்வாக அதிகாரி அறிவழகன் வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அனுமதியின்றி சிலை வைக்கக் கூடாது என்று போலீசார் கூறினார்கள். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அப்துல்கலாம் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. 

📻விவாகரத்தை உறுதி செய்த விஜய்

இயக்குநர் விஜய்- நடிகை அமலா பால் ஆகிய இருவருக்கும் இடையே மணமுறிவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு இயக்குநர் விஜய் பதில் அளித்துள்ளார்.

விஜய் - அமலா பால் ஆகியோர் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். தற்போது இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

📻மதுரையில் திருமண ஆசை காட்டி பெண்ணிடம் உல்லாசம்: கட்டிட தொழிலாளி கைது..!!

மதுரை பைக்காராவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அபிராமி (வயது29), மாற்றுத்திறனாளி. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கோபிநாத் (29), கட்டிட தொழிலாளி.
இவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி அபிராமியிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனை நம்பி அபிராமி 2 பவுன் நகையை கோபிநாத்திடம் கொடுத்தாராம்.

மேலும் திருமண ஆசை காட்டி அவ்வப்போது உல்லாசம் அனுபவித்த கோபிநாத், தற்போது திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி, தான் ஏமாற்றப்பட்டது குறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.

📻நெல்லை மாவட்டம் குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.குற்றாலம் பகுதியில் தொடர்ந்து பெய்த சாரலால் நேற்று பேரருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் நேற்று குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலைமுதல் அருவிகளில் நீர்வரத்து குறையத் தொடங்கியது. இதையடுத்து, பேரருவியிலும் ஐந்தருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

📻சென்னைத் துறைமுகம் வழியாக கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து கார் ஏற்றுமதி செய்து சாதனை அளவினை எட்டியது ஹூண்டாய் நிறுவனம். இதையடுத்து கப்பல் தள வாடகை கட்டணத்தில் (Wharfage Charges) ரூ. 19.70 கோடியை துறைமுக நிர்வாகம் புதன்கிழமை திருப்பியளித்தது.

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் வாகன தயாரிப்பு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் கார்களை சென்னைத் துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி சாதனை அளவை ஹூண்டாய் நிறுவனம் எட்டியதை அடுத்து அந்த நிறுவனம் செலுத்திய கப்பல் தள வாடகை கட்டணத்தில் ரூ. 19.70 கோடியை சென்னைத் துறைமுகம் புதன்கிழமை திருப்பி அளித்தது.

கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை ரூ. 165 கோடி இவ்வாறு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

📻பள்ளியில் ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்த 3-ம் வகுப்பு மாணவனை பள்ளி நிறுவனர் பிரம்பால் தாக்கியுள்ளார். சென்னை மந்தைவெளி 5-வது குறுக்குத்தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்

📻தன்னுடைய மனைவி வெகுநேரம் செல்போனில் யாரிடமோ வெகுநேரமாக் பேசிக் கொண்டிருந்ததில் ஆத்திரம் அடைந்த கணவன், அவரின் காலை உடைத்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

📻📻📻📻📻📻

📻வழக்கறிஞர் சங்க பொதுக்குழு : அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை

தஞ்சை: வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. 2000 வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ள பொதுக்குழுவில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

📻துபாய் - கொச்சி விமானத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பயணி கோஷம்

மும்பை: துபாய் - கொச்சி விமானத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பயணி ஒருவர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மும்பையில் விமானம் தரையிறக்கப்பட்டது. 

📻மாட்டிறைச்சி வதந்தி தொடர்பாக பெண்கள் மீது தாக்குதல்: 4 பேர் கைது

மண்ட்சோர்: மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோரில் மாட்டிறைச்சி வதந்தி தொடர்பாக இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

📻சென்னையில் மின்தடையால் லிப்ட்டில் சிக்கிய இளைஞர்... 4-வது மாடியில் இருந்து விழுந்து பலி

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

📻பவானிசாகர் அணையில் தண்ணீர் திறக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை

கோபி: பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். கோபிசெட்டிப்பாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 15,000 விவசாயிகள் குவிந்துள்ளனர். விவசாயிகின் போராட்டத்தால் கோபிசெட்டிபாயைத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். 

📻7 தமிழர் விடுதலைக்கு மத்திய அரசின் அனுமதி தேவை என்பது மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும்: தமிழக அரசு

டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அவசியம் நிறைவேற்றப்பட்டால் அது மத்திய அரசின் அதிகாரத்தை பரவலாக்குவதாகும்; குற்றவியல் நடைமுறைச் சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பதாகும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் தமிழக அரசு விளக்கியுள்ளது.

📻விமான நிலையம் முதல் சின்னமலை வரை உள்ள மெட்ரோ ரயில் பாதையில் ஆய்வு

சென்னை: சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரை உள்ள மெட்ரோ ரயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் தலைமையிலான குழு மெட்ரோ ரயில் பாதையை ஆய்வு செய்து வருகின்றனர். 

📻போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

கர்நாடகா: கர்நாடகாவில் அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி கார்நாடக மாநிலத்தில் வேலைநிறுத்தம் நடைபெற்று வந்தது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 12.5 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை ஏற்று, போராட்டத்தை திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் முடிவு செய்து பேருந்துகள் நேற்றிரவு முதல் இயங்கத் தொடங்கியுள்ளன.

📻சீனியாரிட்டிபடி புரமோஷன் இல்லை.. ஓய்வு பெற்றவர்களுக்கு 'எக்ஸ்டென்ஷன்'... பி.டபிள்யூ.டி பொறியாளர்கள்

சென்னை: பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பொறியாளர்களை காலிப் பணியிடங்களில் நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு தருவதைக் கண்டித்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழக பொதுப்பணித்துறையில் 7 தலைமைப் பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் சில பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல கண்காணிப்புப் பொறியாளர் பணியிடங்களும் பல காலியாக உள்ளன. இதனால் வேலைகள் பல சுணக்கமாகியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

📻இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் பங்கு அதிகம்: ஜிதேந்திர சிங்

டெல்லி: இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் பங்கு உள்ளது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை தூண்டிவிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். 

📻அரசு பள்ளியில் அசத்தும் மாற்றுத்திறனாளி ஆசிரியை

பேரையூர் : பேரையூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியை வகுப்பு பாடங்களை எளிய முறையில் மனதில் பதிய வைத்து வருகிறார். பேரையூரில் பரதன் முத்துக்குமாரசாமி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1,100 மாணவிகளும் படித்து வருகின்றனர். 45 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் 9 மற்றும் 10 வகுப்பு தமிழ் ஆசிரியையாக இருப்பவர் நித்யஸ்ரீ.பார்வையற்ற இவர், வகுப்பில் பாடங்களை பாடல்கள் மூலம் மனதில் பதியும் வகையில் கற்பித்து வருகிறார். பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் தரும் உற்சாகத்தால் மாணவர்களுக்கு மிக எளிதான முறையில் பாடம் நடத்தும் நித்யஸ்ரீ, தேனி அருகிலுள்ள ஜி.கல்லுப்பட்டியில் 2 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

அதன்பின்பு இப்பள்ளியில் 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரின் கற்பிக்கும் பாணிக்கு மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

📻நேபாள வெள்ளம் : 64 பேர் பலி

காத்மாண்டு : நேபாளில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுதவிர 64 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.பல இடங்களில் வீடுகளும், முக்கிய பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

📻பேஸ்புக்கில் கருத்து : கலெக்டருக்கு நோட்டீஸ்

ராய்பூர் : 2012ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் கடத்தியதால், இந்தியா முழுவதும் பிரபலமானவர் சட்டீஸ்கரின் ராய்பூர் மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்திய சட்ட அமைப்பிற்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளதால், அதற்கு விளக்கம் கேட்டு அலெக்சிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அலெக்ஸ் தனது பேஸ்புக் பதிவில், 94 சதவீதம் இந்தியர்கள், இறந்தாலும், சட்ட அமைப்பு இஸ்லாமியர் அல்லது தலித்திற்கு ஆதரவாக தான் இருக்குமா? என குறிப்பிட்டுள்ளார்.

📻புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவை கண்டித்து தி.வி.கழகம் மறியல்

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவை கண்டித்து தி.வி.கழகம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் அமையவிருந்த ஆயுர்வேத கல்லூரியை ஏனாம் தொகுதிக்கு மாற்றியதை கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புதுவையில் சூதாட்ட படகு அறிமுகம் செய்யப்படும் என்ற அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

📻கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி அதிகரிக்கும் சிறார் குற்றவாளிகள்

மதுரை : மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக குற்றங்களில் ஈடுபட்டு 'சைல்ட் ஹோம்' எனப்படும் கூர்நோக்கு இல்லங்களுக்கு வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

📻பியூஷ் மனுஷ் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சேலம்: சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிறையில் தம்மை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

📻வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 120 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 120 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 47.81 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119.99 புள்ளிகள் உயர்ந்து 28,144.32 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், ஆட்டோ மற்றும் எப்எம்சிஜி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.13% வரை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32.85 புள்ளிகள் அதிகரித்து 8,648.65 புள்ளிகளாக உள்ளது

📻தேனியில் தொடரும் சாலை விபத்துக்கள்... தடுப்புச் சுவரில் கார் மோதியதில் 3 பேர் பலி

தேனி: தேனி அருகே ஓடைப்பால தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில், ஜவுளி கடை உரிமையாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்று தேனி சாலையில் பேருந்தும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து தேனி அருகே சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

📻மேற்குஇந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி : இந்திய அணியினர் தீவிர பயிற்சி

ஜமைக்கா: மேற்குஇந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் வெல்ல முனைப்பில் உள்ள இந்திய அணியினர் தீவிர பயிற்சி எடுத்தனர். நாளை மறுநாள் 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற உள்ளது. இதற்காக ஒருநாள் முன்னதாகவே இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

📻தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க குமரியில் சாஜக் ஆபரேஷன்

கன்னியாகுமரி : தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையிலும், சென்னையில் மாயமான விமானத்தை தேடும் வகையிலும் குமரியில் சாஜக் ஆபரேஷன் நேற்று நடந்தது. கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலோர பாதுகாப்பு படை இணைந்து குமரி கடல் மற்றும் கடலோர பகுதிகளில் நேற்று சாஜக்(எஸ்எஎஜெஎஜி) ஆபரேஷனை நடத்தின. காலை 6 மணிக்கு துவங்கிய இந்த ஆபரேஷன் மாலை 6 மணி வரை நடந்தது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ் தலைமையில் நான்கு குழுக்கள் அதிநவீன விசைப்படகுகளில் சென்று கடல் பகுதிகளில் இந்த ஆபரேஷனில் ஈடுபட்டனர். 

📻கரூரில் கோவில் திருவிழாவில் பங்கேற்ற அனுமதி மறுப்பு: தலித் குடுபத்தினர் போராட்டம்

கரூர்: கரூரில் கோவில் திருவிழாவில் பங்கேற்ற அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தலித் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தங்களின் வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டையை திருப்பி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முஸ்லிம் மதத்திற்கு மாற மிரட்டல் விடப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

📻பாக்.,கில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங் - இரு நாட்டு உறவு குறித்தும் ஆலோசிக்க திட்டம்

டெல்லி: காஷ்மீரில் நீடிக்கும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்து வரும் நிலையில், அங்கு நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். 

📻டெல்லியில் நாளை தமிழக மீனவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

சென்னை: தமிழக மீனவர்களுடன் மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த பேச்சுவார்த்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தமிழக அரசுடன், மீனவ சங்க பிரதிநிதிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்துகின்றனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

📻திருப்பூரில் கடத்தப்பட்ட 1-ம் வகுப்பு மாணவன் தாராபுரத்தில் மீட்பு

திருப்பூர்: திருப்பூரில் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 1-ம் வகுப்பு மாணவன் நரசிம்மன் தாராபுரத்தில் மீட்கப்பட்டுள்ளான். இருசக்கர வாகனத்தில் சிறுவனை கடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📻அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லி கொண்டுவரப்பட்ட தீவிரவாதி பகதூர் அலி

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி பகதூர் அலி அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லிக்கு தேசிய புலானய்வு அமைப்பினர் கொண்டு சென்றுள்ளனர். 

📻குடிசை மாற்று வாரிய வீடுகட்டும் திட்டம் முழுமை அடையாதது ஏன்? : திமுக கேள்வி

சென்னை: 5 ஆண்டுக்கு முன் அறிவித்த குடிசை மாற்று வாரிய வீடுகட்டும் திட்டம் முழுமை அடையாதது ஏன் என்று சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் துறைமுகம் திமுக எம்.எல்.ஏ. சேகர் பாபு கேள்வி எழுப்பினார். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என 2011-12-ல் அதிமுக அரசு அறிவித்ததை சுட்டிக் காட்டினார். இதுவரை தமிழகத்தில் 59 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக சேகர்பாபு தெரிவித்தார். 

📻காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா மகதாயி நதியில் குடிநீர் கேட்டு கதறுகிறது...

பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீரை திறந்துவிடாமல் வஞ்சித்து வரும் கர்நாடகா தற்போது மகதாயி நதியில் குடிநீர் கோரி போராட்டத்தில் குதித்துள்ளது. இதனால் வடகர்நாடகா பகுதிகள் போர்க்களமாக கொந்தளித்து கிடக்கிறது. இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு வடகர்நாடகா விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது.

📻கல்வித்துறையில் தமிழகம் முதன்மை மாநிலம்: ஓ.பி.எஸ்.,

சென்னை: சட்டசபையில் பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கல்வித்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு ரூ.14,243 கோடியும், உயர் கல்வித்துறைக்கு ரூ.84,941 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்றார்.

📻ரூ.50 ஆயிரத்திற்கு சிறுமி விற்பனை

மும்பை: வேலை வாங்கி தருவதாக கூறி டில்லியிலிருந்து என்னை அழைத்து வந்து, திருமணம் செய்து கொண்ட கணவர், பின் ரூ.50 ஆயிரத்திற்கு தன்னை விற்றுவிட்டதாக 14 வயது சிறுமி ஒரு அளித்த புகாரின் போரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வீட்டு வேலை செய்யும் பணியாளராக ரூ.50 ஆயிரத்திற்கு பெண் ஒருவரிடம் விற்றுவிட்டதாக அந்த சிறுமி கூறியுள்ளார். அந்த பெண்ணின் தலையில் காயம் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். 

📻மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் பாம்பு பிடித்த 8 பேர் கைது - வனத்துறை நடவடிக்கை

காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே சர்க்கரை ஆலை வளாகத்தில் குடியிருந்த பாம்புகளை பிடித்த 8 பாம்பாட்டிகளை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 380 பாம்புகளையும் கைப்பற்றினர்.
அபராதம் விதிக்க முடிவு

இது தொடர்பாக ஆலை நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்டிருக்கிறோம். 360 பாம்புகளை கைப்பற்றி இருக்கிறோம். அதில் நல்ல பாம்பு, சாரை பாம்பு, மண்ணுளி பாம்பு, தண்ணீர் பாம்பு, கண்ணாடி விரியன் ஆகிய வகைகள் உள்ளன. அவற்றை விரைவில் வனப் பகுதிகளில் விட்டுவிடுவோம். பாம்பு பிடித்த எட்டு பேருக்கும் வன உயிரின பாதுகாப்பு சட்டம்- 1972-ன் படி உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


📻பழங்குடியின பெண்களிடம் அதிகாரிகள் தவறாக நடக்கவில்லை: அமைச்சர்

சென்னை: கடமலைக்குண்டு பகுதியில், ஆதிவாசி பெண்களிடம் வனத்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தி.மு.க., உறுப்பினர் ஆஸ்டின், சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், பழங்குடியின பெண்களிடம் வனத்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுவது தவறு. மேகமலையில் எறும்பு திண்ணிகள் கடத்தப்படுவதாக குறித்த புகாரின் பேரில் சோதனை நடத்தினர். வனச்சரக அலுவலகத்திற்குள் புகுந்த மக்கள் தாக்குதல் நடத்தி பொருட்கள் சேதப்படுத்தினர். இதில் வனத்துறை அதிகாரி சுபாஷ் என்ற அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாரிகள் மீதான புகார் தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடந்தது.

விசாரணையில், அதிகாரிகள் மீது தவறில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை மட்டுமே நடத்தினர் என்றார்.

📻சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

📻செஞ்சிக்கோட்டையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சுடிதார் சிக்கியது: போலீசார் விசாரணை

செஞ்சிக்கோட்டையில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் நீலநிற சுடிதார் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

📻தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.232 ம், கிராமுக்கு ரூ. 29ம் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.60 காசுகளும், பார்வெள்ளி விலை ரூ.1505 ம் அதிகரித்துள்ளன.இன்றைய (ஜூலை 28) காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2963 ஆகவும், 10 கிராம் (24 காரட்) ரூ.31,690 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,704 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.52.30 க்கும், பார்வெள்ளி விலை ரூ.48,875 க்கும் விற்பனையாகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here