மாலை செய்திகள் 29/07/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்திகள் 29/07/2016


            

http:;//www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

📻📻📻📻📻📻📻📻📻📻

📻அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு தேவையான பணியாளர்களை எழுத்து தேர்வு மூலமும், நேர்முக தேர்வு மூலமும் நியமனம் செய்து வருகிறார்கள்.

அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வெவ்வேறு வகையான பணியிடங்களுக்கு தகுந்தாற்போல் அதற்கு தேவையானவர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதற்கான தகுதி தேர்வை, வேலைக்கு தகுந்தார்போர் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 என தனித்தனியாக ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு, தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் ஐந்தாயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு-3, நிலஅளவர், நில பட வரைவாளர் போன்ற பணிளை நிரப்ப நடத்தப்படுவதுதான் குரூப்-4 தேர்வு.

இந்த தேர்விற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு போதுமானது. அத்துடன் டைப்ரைட்டிங், சார்ஹேன்ட் போன்ற தொழிற்கல்வி பயிற்சி முடிந்திருப்பவர்கள் எளிதில் வேலையை பெற முடியும்.

ஏற்கனவே ஜூலை மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய இந்நத குரூப்-4 தேர்வு, தமிழக சட்டசபை தேர்தலால் தள்ளி போனது. அதனால் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📻காரைக்காலில் 5,000 கிலோ கோழி மீன் சிக்கியது

காரைக்கால் : காரைக்கால் மீனவர்கள் வலையில் அரியவகையான கோழிமீன் 5,000 கிலோ வரை சிக்கியது. காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை படகுகளில் மீன்பிடித்து வந்தனர். அப்போது மீனவர்கள் வலையில் நேற்று அரியவகை கோழிமீன்கள் ரூ.5,000 கிலோ வரை கிடைத்தது. இந்த அரியவகை கோழி மீன்கள் மற்ற மீன்களைவிட உருவத்தில் வேறுபாடு கொண்டது. தோல் பகுதி தடினமாகவும், வாய்ப்பகுதி சிறிய ஓட்டைப்போலும், கண் பகுதி மற்ற மீன்களைவிட 5 செ.மீட்டர் தள்ளியும் இருக்கும். இதன் கறி, பிராய்லர் கோழிக்கறி போலவும், முள்திருக்கை மீன் முள்போல் மிருதுவாகவும் இருப்பதால் கோழிமீன் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 

📻தமிழகத்தில் உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

📻கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோயில்: நாகர்கோவில் அருகே பொறியியல் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி அந்த கலூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோயில் அருகே வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் கட்டண கொள்ளையை கண்டித்து கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மனு கொடுத்த மாணவர்களை சஸ்பெண்ட் செய்ததால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

📻ஏலச்சீட்டு நடத்தி 1 கோடி ரூபாய் மோசடி

தருமபுரி: தருமபுரியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்ததாக சுரேஷ் என்பவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுரேஷிடமிருந்து பணத்தை வசூலித்து தருமாறு மாவட்ட எஸ்.பியிடம் பொது மக்கள் புகார் அளித்துள்ளனர்.

📻மு.க.அழகிரி ஆஜராகாததால் வழக்கு விசாரணை செப்.,2க்கு தள்ளிவைப்பு

மேலூரில் தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட மு.க.அழகிரி மீதான வழக்கின் விசாரணை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

📻குழந்தையை கொன்ற வழக்கு: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

காஞ்சிபுரம்: கணவனின் முதல் மனைவியின் குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. செல்வியின் குழந்தை மல்லிகாவை(9) கொன்ற சரோஜினிக்கு ஆயுள் தண்டனையம், ஜெய்சிங்கிற்கு 3 வருட சிறை தண்டனையும் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📻41 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்வித்துறையில் காலியாக உள்ள 41 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் டி.இ.ஓ.க்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். 

📻மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர்.இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல் தெலுங்கானா மற்றும் ஆந்திர மீனவ பிரதிநிதிகளும் சுஷ்மா சுவராஜை சந்தித்தனர்.

📻திண்டுக்கல் மாவட்ட புதிய கலெக்டராக டாக்டர் டி.ஜி.வினய் நியமனம்

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட புதிய கலெக்டராக டாக்டர் டி.ஜி.வினய்,36, நியமிக்கப்ப ட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த ஹரிஹரன் கோவை மாவட்ட கலெக்டராக ஜூலை 4ல் மாற்றப்பட்டார். டி.ஆர்.ஓ., பாஸ்கரன் பொறுப்பு கலெக்டராக பணிகளை கவனித்தார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்த டாக்டர் டி.ஜி.வினய், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டு
உள்ளார்.

📻லாரிகளில் அளவுக்கு அதிகமான மணலை ஏற்றக் கூடாது: அமைச்சரிடம் கோரிக்கை

சென்னை: மணல் லாரிகளில் அளவுக்கு அதிகமான மணலை ஏற்றக் கூடாது என அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிஇடம் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

📻மும்பை லாமிங்டன் சாலை கடையில் தீ விபத்து

மும்பை: மும்பை லாமிங்டன் சாலையில் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்டுளள்து. சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விவரம் தெரிவிக்கப்படவில்லை. 

📻ராமநாதபுரம் அருகே அரசுபேருந்து - ஆம்புலன்ஸ் மோதி விபத்து ! 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் திருப்புல்லாணி அடுத்த பால்கரை அருகே ஏர்வாடி நோக்கி வந்த அரசுபேருந்தும் கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ்ம் எதிர்பாராத விதமாக மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்.

📻
கோவை மாங்கரையில் 15 நாட்களாக காயங்களுடன் திரிந்த குட்டி யானை உயிரிழப்பு

கோவை: கோவை மாங்கரையில் 15 நாட்களாக வாயில்
காயங்களுடன் சுற்றி திரிந்த குட்டி யானை உயரிழந்தது. யாரையும் நெருங்க விடாமல் இறந்த குட்டியானை அருகே தாய் யானை நிற்கிறது. 

📻அன்னை தெரசாவுக்கு செப்.4ல் புனிதர் பட்டம்: சுஷ்மா பங்கேற்பு!

 'பாரத ரத்னா' அன்னை தெரசாவுக்கு இத்தாலியில் உள்ள வாட்டிகன் நகரில் 'புனிதர்' பட்டம் வழங்கப்படுகிறது. செப்டம்பர் 4ம் தேதி நடக்கும் இவ்விழாவில், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்க உள்ளார். 'புனிதர்' பட்டத்திற்கு முந்தைய அந்தஸ்தை கடந்த 2003ல் பெற்றார் அன்னை தெரசா!

📻கமல் காயம்: கவுதமி வேதனை!

சமீபத்தில் மாடிப்படிகளில் தவறி விழுந்து காயம் பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் கமல்ஹாசன். அவர் தற்போது குணமாகிக் கொண்டு வந்தாலும், அவரைக் கண்டு கவுதமி மிகவும் வேதனையடைந்துள்ளார். "ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தவர் தற்போது ஒரே இடத்தில் இருக்கிறாரே" என்று வருத்தத்துடன் தெரிவித்தார் கவுதமி!

📻காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 5–ந் தேதி உள்ளூர் விடுமுறை
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ‘’மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா வரும் 5–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்டு மாதம் 27–ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📻மதுரை கூடல்புதூரில்
ஓட்டல் ஊழியர்களை தாக்கிய காவலர்கள் 2 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரவு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

📻தமிழகத்தின் கடன் கட்டுக்குள் உள்ளது:
ஓ.பி.எஸ்.!
சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார மாற்றத்தாலும், மந்த நிலையாலும் கடன் இரட்டிப்பாக உள்ளது.அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் கடன் சுமை கட்டுக்குள் உள்ளது.

📻ஆடி கார் ஐஸ்வர்யா மீண்டும் ஜாமீன் மனு

சென்னையில் ஆடி கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜாமீன்கோரி 2-வது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா மனுத்தாக்கல் செய்துள்ளார். கிண்டி போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜுலை 2-ம் தேதி தரமணியில் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டியதில் முனுசாமி என்பவர் உயிரிழந்தார்.

📻கோவை அருகே யானை மீது மீண்டும் ரயில் மோதியது.
இன்று காலை 6.10 மணிக்கு குட்டியுடன் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
தண்டவாளத்தில் யானையை பார்த்ததும் பிரேக் பிடித்ததால் யானை காயத்துடன் தப்பியது.
காயமடைந்த நிலையில் வனத்தில் இருக்கும் யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை துவக்கியது வனத்துறை.யானையின் உயிருக்கு ஆபத்தில்லை - மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தகவல்.

📻கிருஷ்ணகிரி மாவட்ட மழை நிலவரம்
மில்லி மீட்டர் அளவில்: ஊத்தங்கரை& 56, பெணுகொன்டபுரம்82.40,பேh ச்சம்பள்ளி38.50, கிருஷ்ணகிரி 67.40, நெடுங்கல் 42.40, பாரூர்.52.50,சூளகிரி -80, ராயக்கோட்டை -73, அஞ்செட்டி -52.5, ஓசூர் -42, தேன்கனிக்கோட்டை -30, தளி - 20, என மொத்தம் 636.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

📻தென்பெண்ணை ஆற்றில் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் பாட்டகோட்டா தரைப்பாலத்தை கடக்கவேண்டாம் என எச்சரிக்கை

📻கேளம்பாக்கம் அருகே தாழம்பூர் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய  அதே பகுதியை சேர்ந்த  4 பேரைக்  கோவளம் அருகே  நள்ளிரவில் பணம் பெறும் போது போலீசார் சுற்றி வளைத்து  கைது செய்து கல்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து  விசாரணை.

📻அரசு பேருந்தில் பயணம்: எளிமைக்கு மறு பெயர் உம்மன்சாண்டி-நேற்று முன்தினம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு சென்ற அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டார். அப்போது, கட்சி நிர்வாகிகள் அவரை பேருந்து நிலையம் வரை காரில் அழைத்து வந்தனர். அங்கிருந்து கேரள அரசு பேருந்தில் ஏறி பயணிகளுடன் பயணிகளாக திருவனந்தபுரம் புறப்பட்டார். பேருந்தில் அவருடன் பயணம் செய்த பயணிகளுக்கு இந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

📻திருவண்ணாமலை அருகே கீழ்நாத்தூர் நகராட்சி -ஆங்கிலம் தெரியவில்லை என்று 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்

📻ஆவடி அருகே ஆரிக்கம்பேடு, அன்பு நகர், ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 22 பவுன் நகை–வெள்ளி பொருட்கள் திருட்டு

📻மதுரவாயல் அருகே லாரி மோதி 2 மாணவர்கள் பலி

📻ஊட்டியில் காட்டுப்பன்றி வேட்டை: ஐந்து பேருக்கு
ரூ. 35-ஆயிரம் தண்டம்
நீலகிரி மாவட்டம், பிக்கட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அவரக்கண்டிப்பகுதியில்

📻அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தரும் ஆயாவின் மகன் மீது நடவடிக்கை கோரி புகார்!
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகிலுள்ள மூங்கில்பாளையம் ஊராட்சி

📻திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது உடந்தையாக இருந்த பெண்ணும் சிக்கினார்-சென்னையை அடுத்த பம்மல் முத்தமிழ் நகர், காமராஜர் சாலை--இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக மாதவரம் கொசப்பூரை சேர்ந்த ராஜேஷ்(வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜேசுக்கு உடந்தையாக இருந்ததாக இளம்பெண்ணின் உறவினரான வரலட்சுமி(25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

📻📻📻📻📻📻📻

📻சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

📻சென்னை ஆலந்தூர் ஆசர்கானா சந்திப்பில் நடைமேம்பாலம் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளார்

📻ஹெலிகாப்டர் வயலில் இறங்கியது முதல் மந்திரி வசுந்தரா உயிர் தப்பினார்-தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்ட அவர் 334 கி.மீ தொலைவில் உள்ள செவந்திரி என்ற கிராமம் அருகே  சென்ற போது அந்தப்பகுதியில் மோசமான வானிலை நிலவியது. தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஹெலி காப்டரை வயல் வெளியில் விமானி தரை இறக்கினார்.

📻தேனாம்பேட்டையில் எஸ்.ஐ. மனைவியிடம் செல்போன் பறித்த மற்றொரு எஸ்.ஐ மகன் கைது செய்யப்பட்டார். பாபுமுதலி தெருவில் நடந்து சென்ற எஸ்.ஐ செல்வத்தின் மனைவி கண்ணகியிடம் செல்போனை பறித்தவர கைது செய்யப்பட்டார். செல்போனை பறித்த எஸ்.ஐ மகன் லோகேஷை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

📻கிருஷ்ணகிரி மாவட்டம்,கந்திகுப்பம் அருகேயுள்ள கெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர் குடும்ப தகராறு காரணமாக தம்கொலை செய்து கொண்டார்.
கந்திகுப்பம் போலிசார் விசாரணை

📻பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பணிகாலத்தை நீட்டிபதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாந்தஷீலா நாயர் தலைமையிலான குழுவின் பணிக் காலத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

📻திருப்பூரில் பள்ளியில் இருந்து சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் நரசிம்மன் கடத்தப்பட்ட வழக்கில் நேற்று தேவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

📻காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் உட்பட 10 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீரில் வியாழக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 37 பேர் காயமடைந்தனர். 

📻சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. மாநில கல்லூரி - தியாகராய கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

📻கோவை அருகே வாளையாரில் ரயில் மோதி பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடந்த 40 நாட்களில் கோவை வனப்பகுதியில் 10 யானைகள் உயிரிழந்துள்ளன. தண்டவாளம் அருகே நின்றிருந்த பெண் யானை மீது வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. 

📻தங்கம் விலை சிறிது குறைவு!

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,966

22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.23,728

24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.31,725

வெள்ளி: ஒரு கிராம் - ரூ.52.20

வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.48,785

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📻📻📻📻📻📻📻📻📻📻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here