31/07/2016 9 O CLOCK NEWS - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

31/07/2016 9 O CLOCK NEWS

www.sivakasiteacherkaruppasamy.bloblogspot.com

1அரசு சிமென்ட் மூட்டைகளை லாரியுடன் கடத்த முயற்சி: தி.மலை அருகே பரபரப்பு

2.ரூ.10 ஆயிரத்துக்காக சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து சிறுவனை தப்ப வைத்த 4 பேர் கைது

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில், இளம் குற்றவாளியை ரூ.10 ஆயிரத்திற்கு தப்பிக்க விட்டதாக வார்டன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

3.ரயில்வே ஊழியர்களுக்கு விரைவில் வருது புதீய சீருடைகள்!

இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகள் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய சீருடைகளை வடிவமைத்து வழங்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

4.நாளை முதல் பி.எட். படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்!

தமிழகத்தில் நாளை முதல் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் பி.எட். படிப்புக்கான 1,777 இடங்களும் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர நாளை (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பங்கள் விநியோகிகப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சாதி சான்றிதழ் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிக்க மோடி பிரசாரம் செய்ய வேண்டும்: ராம் தேவ் சர்ச்சை பேச்சு

ரோட்டக்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிப்பது தொடர்பாக பிரதமர் மோடி பிரசாரம் செய்ய வேண்டும் என ராம் தேவ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

6.ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தருவதாக டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதியளித்ததன் பேரில் ராமேசுவரம் மீனவர்கள் இருந்து வந்த காலைவரையற்ற வேலைநிறுத்தத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

7.சென்னை தி.நகரில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து

சென்னை: சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் விபத்து ஏற்பட்டுள்ளது. சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. உடனே அங்கு தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

8.ஊட்டி மலை ரயிலில் செப். 5வரை முன்பதிவு நிறைவு

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் இதமான சீதோஷன நிலை நிலவுகிறது. இதை அனுபவிக்கவும் மலை ரயிலில் பயணிக்கவும் கூட்டம் அலைமோதுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 4 பெட்டிகளுடன் மட்டுமே மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது.
2ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் 91 பேர் பயணிக்கலாம். முதல் வகுப்பில் 16 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். 

பயண கட்டணமாக முதல் வகுப்பிற்கு ரூ.250, 2ம் வகுப்பு முன்பதிவுடன் ரூ.45 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு முதல் வகுப்பு ரூ.185, 2ம் வகுப்புக்கு ரூ.35 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர விரும்புகின்றனர். மலை ரயிலில் பயணிப்பதற்காக விரும்பிய பயணிகள் முன்பதிவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டியதால் செப்டம்பர் 5ம் தேதி வரை முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

9.குண்டர் சட்டத்தில் 15 பேர் கைது

சென்னையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

10.உத்தரபிரதேசம் மாநிலத்தில் தாய் மற்றும் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மாநிலத்தில் முழுமையான காட்டாட்சி நடைபெறுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்

11.நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

ஆந்திராவைச் சேர்ந்த ஹெரிடேஜ் நிறுவனம் தங்களது பாலுக்கான விலையை நாளை திங்கள்கிழமை (ஆக.1) முதல் லிட்டர் ரூ.2 விலை உயர்த்தியுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

12.சித்தராமையா மகன் மறைவு: கலைஞர் இரங்கல்

கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், ''உங்களது அன்பு மகன் ராகேசின் அகால மரணம் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த துயரமான, ஆழ்ந்த கவலை மிகுந்த இத்தருணத்தில் தங்களுக்கும், தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்ல போதிய வார்த்தைகள் இல்லை. எனது ஆழ்ந்த இதயத்தில் இருந்து வெளிப்படும் வருத்தத்தை தயவு செய்து ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

13.1கிலோ நகை கொள்ளை

கள்ளக்குறிச்சியில் நகைகடையினை மூடிவிட்டு வீட்டிற்கு நகையினை எடுத்துச் சென்றபோது இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட் கும்பல் கத்தியால் கையை வெட்டி ஒன்றரை கிலோ தங்க நகையினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தலைமறைவாகி விட்டனர்.

கள்ளக்குறிச்சி கடைவீதியில் சுமங்கலி என்ற நகை கடை வைத்திருப்பவர் முருகன் (53). இவர் தினமும் இரவு கடையை மூடும் போது நகையினை பையில் எடுத்துக் கொண்டு கடைக்கு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று சனிக்கிழமை இரவு கடையினை மூடிவிட்டு கடையில் பணிபுரியும் ஊழியரான சீத்தாராமன் மகன் சவுந்திரபாண்டியன்(36) நகை பையை எடுத்துக் கொண்டு கடையை விட்டு கீழே இறங்கியுள்ளார்.

அப்போது இவருக்கு பின்புறம் இரு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர்கள் சத்தம் போட்டுக் கொண்டே வந்தவர்கள் கத்தியை கையில் வைத்துக் கொண்டு நகை பையினை பிடுங்கியுள்ளனர்.

இவர் நகை பையினை விடாமல் பிடித்துக் கொண்டு ஓட முயற்சித்துள்ளார். இதையடுத்து கத்தியால் கையை வெட்டி விட்டு நகை பையினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

14. 2வது ஆபரேஷன் நடந்தது கமலிடம் ரஜினி நலம் விசாரித்தார்

சென்னை: கமல்ஹாசனுக்கு 2வது ஆபரேஷன் நடந்து முடிந்தது. அவரிடம் ரஜினிகாந்த் உடல் நலம் விசாரித்தார். 

15. 23 பேர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பாதுகாப்பு பிரிவு குற்ற புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளர் சரவணன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, குமரன் நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவபெருமான், எழும்பூர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சொர்ணசுந்தரம், காவலர் நவீன்குமார், குரோம்பேட்டைப் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மஸ்தூராகப் பணி புரிந்த சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த உதயகுமார் உள்பட தமிழகம் முழுவதும் சாலை விபத்து, உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

16. அ.தி.மு.க., எம்.பி. சசிகலா புஷ்பா பதிலளிக்க மறுப்பு

சென்னை: டில்லியில் நேற்று நடந்த கைகலப்பு தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நடத்திய விசாரணை குறித்து எம்.பி., சசிகலா புஷ்பா பதிலளிக்க மறுத்துவிட்டார்.அ.தி.மு.க., எம்.பி. சசிகலா புஷ்பாவிற்கும் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவிற்கும் இடையே டில்லி விமானநிலையத்தில் நேற்று கைகலப்பு நடந்தது. இதில் சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை அறைந்தார். அ.தி.மு.க. ஆட்சி பற்றியும் தமிழக முதல்வர் குறித்தும் சிவா தவறாக விமர்சித்தால் அவரை அறைந்ததாக சசிகலா புஷ்பா ஊடகங்களுக்கு பதில் அளித்து இருந்தார்.இச்சம்பவம் குறித்து அ.தி.மு.க., கட்சி தலைமை சசிகலா புஷ்பாவிடம் இன்று விளக்கம் கேட்டது. அவரும் விளக்கம் அளித்தார். இன்று மாலைசென்னை விமான நிலையம் வந்த அவரிடம் கட்சி தலைமை நடத்திய விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு அவர் பதிலளிக்கு மறுத்துவிட்டார்.

17.தமிழ்நாடு இறகு பந்து கழக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்

சென்னை: தமிழ்நாடு இறகு பந்து கழக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டார்.சங்க விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாக தமிழ்நாடு இறகு பந்து கழக பொருளார் ராஜ்குமார் தெரிவித்தார்.

18.புதுச்சேரி யூனியன் பிரதேசம் இன்னும் 2 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்றதாக மாற்றும் என புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் தான் விரைவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

19.இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து விக்கெட் வேட்டையில் குதித்திருப்பதன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

அனில் கும்ப்ளே, பி. சந்திரசேகர் ஆகியோர் படைத்த ஒரு சாதனையை அவர் தற்போது சமன் செய்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் சாய்த்த அஸ்வின், 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களைக் காலி செய்து அசத்தினார்.

இதன் மூலம் சந்திரசேகர், கும்ப்ளே ஆகியோர் படைத்து வைத்திருந்த சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்

20.சாரல் விழா

வண்ண வண்ண மலர்கள்.. ஆசை தீர உண்டு மகிழ அம்மா உணவகம்.. களை கட்டிய சாரல் விழா!

நெல்லை: குற்றாலத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர்கண்காட்சியை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

குற்றாலத்தில் ஆண்டுத் தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3மாதங்கள் சீசன் காலமாகும். இக்காலங்களில் ஆண்டுக்கு 70 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆர்ப்பாரித்துக்கொட்டும் அருவிகளில் ஆனந்த நீராடிட வந்து செல்வதுண்டு.

பல்வேறு சிறப்புக்கள் வாய்ந்த குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீராடிட வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் பொழுதை பயனுள்ளதாக மற்றும் வண்ணமும்,அவர்களது சுற்றுலா பயனுள்ளதாக அமையும் வண்ணமும்,ஆண்டுத்தோறும் தமிழக அரசின் சார்பில் சாரல் திருவிழா ஜூலை மாதத்தின் இறுதியில் நடத்தப்படுவதுண்டு.

சாரல் திருவிழா...

இதில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுவதும் வழக்கம் .இந்தாண்டு சாரல் திருவிழா நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று குற்றாலம் நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன.

மலர்க் கண்காட்சி...

பின்னர் ஐந்தருவி சுற்றுசூழல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்க்கண்காட்சி, வாசனைதிரவி கண்காட்சி,காய்கறிகளால் ஆன விலங்குகள் கண்காட்சி உள்ளிட்டவைகளின் தொடக்க விழா நடைபெற்றது.

அமைச்சர் ராஜலட்சுமி...

இவ்விழாவில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமிகலந்து கொண்டு மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சட்டசபை உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

WWW.SIVAKASITEACHERKARUPPASAMY.BLOGSPOT.COM
சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்...

மலர்கண்காட்சியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்துக் கொண்டு ஆர்வமுடன் கண்காட்சியில் இடம் பெற்ற வண்ண மலர்கள்,காய்கறிகள்,விலங்குகளை கண்டு களித்தனர்.இங்கு அம்மா உணவகம், மகேந்திரகிரி ராக்கெட் தளம், கூடங்குளம் அணுஉலை உள்ளிட்ட ஸ்டால்களும் இடம் பெற்றுள்ளன.

21.கணவர், 2 குழந்தைகளை மறந்து... கள்ளக்காதலில் திளைத்த மனைவி.. ஒருவர்  தற்கொலை.. ஒருவர் உயிர் ஊசல்!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கணவர், 2 குழந்தைகளை கள்ளக்காதலில் திளைத்தார் மனைவி. தனது கள்ளக்காதலுக்கு கணவரால் இடையூறு இருப்பதாக கருதிய அவர் கள்ளக்காதலருடன் சேர்ந்து விஷம் குடித்தார். இதில் மனைவியின் உயிர் ஊசலாடுகிறது. கள்ளக்காதலர் இறந்து போனார்.

22.மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் ஏழைக் குழந்தைகளுக்கு பாதிப்பு: கனிமொழி தாக்கு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையால் ஏழை வீட்டு குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காது என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைகளுக்கு எதிராக நெல்லையில் சிறுபான்மையினர் சார்பில் போராட்டம் நடந்தது. இதில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.

23.வாட்ஸ் ஆப்பில் குரூப் வைத்து கஞ்சா விற்கும் கும்பல்.. போலீஸ் ஷாக் தகவல்!

சென்னை: கஞ்சா விற்பனையில் பல புதுமைகளைப் புகுத்தி வருகிறார்களாம் கஞ்சா வியாபாரிகள். போலீஸார் இதை அம்பலப்படுத்தியுள்ளனர்.

கஞ்சா விற்பனையைத் தடுக்கவும் கஞ்சாவை ஒழிக்கவும் போலீஸார் என்னதான் செய்தாலும் புதுப் புது டெக்னிக்குகளைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனை நடந்து கொண்டுதான் உள்ளது.

பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே கஞ்சா விற்கின்றனர். கஞ்சா சாக்லேட் விவகாரம் பெரும் தலைவலியாகவே உள்ளது போலீஸாருக்கு. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலமாக கஞ்சா விற்பன நடைபெறுவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

24.சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த போதும், உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பாமக.

இது ஒருபுறம் இருக்க பிரேமலதாவை தேமுதிகவின் கொள்கைப் பரப்புச் செயலாராக மாற்ற திட்டம் தீட்டி வருகிறாராம் விஜயகாந்த்.

25.செல்பி மோகம்... குளத்தில் மூழ்கி தேசிய தடகள வீராங்கனை பூஜா குமாரி பலி

செல்பி எடுக்க முற்பட்ட போது தவறி குளத்தில் விழுந்த தேசிய தடகள வீராங்கனை பூஜா குமாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது டிரிபிள் ஜம்ப் வீராங்கனை பூஜா குமாரி. இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடியுள்ள இவர், டெல்லியில் நடைபெற்ற சப்-ஜூனியர் தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

26.பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் விழுந்து உயிரிழந்த விவசாயி சீனு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் குதித்த அவரது குடும்பத்தினரை ஆந்திர போலீஸாரும், அதேபோல தமிழக போலீஸாரும் குழப்பியும், மூளைச் சலவை செய்தும் உடலை வாங்க வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

27.நடந்தது கைகலப்பு அல்ல.. தாக்குதல்- திருச்சி சிவா அதிரடி
சென்னை: எனக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் இடையே கை கலப்பு நடந்ததாக கூறப்படுவது தவறு. நடந்தது தாக்குதல் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.

28.பெட்ரோல்  டீசல்
விலை குறைப்பு

பெட்ரோல் விலை
லிட்டருக்கு ரூ 1.42 குறைப்பு

டீசல் விலை லிட்டருக்கு
ரூ 2.01 குறைப்பு

29.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே பிள்ளையார்நத்தம் பாறைப்பட்டி வளைவில் டாடா ஏசியும்.டூவிலரும் நேருக்கு நேர் மோதல்..திருச்சி மாவட்டம் மட்டக்குறிச்சியைச் சேர்ந்த பழனிவேல்(44) சம்பவ இடத்தில் பலி..

30.தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு: கருணாநிதி

தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் மயமாகி வருவதால், இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். வெறும் அறிவிப்போடு நின்று விடாமல், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக உயர் நிலை குழு அமைக்க முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உ.பி., தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது எனக்கூறியுள்ளார்.

31.அதிமுக எம்பி சசிகலா புஷ்பா, தம்பிதுரை எம்பி ஆகியோர் போயஸ்கார்டன் இல்லத்திற்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள்.
திமுக எம்பி திருச்சி சிவா கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.
டெல்லியில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டை தொடர்பாக விளக்கம் அளிக்க சென்றுள்ளதாக தகவல்

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

32.சென்னை புழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் கைதி தூக்கிட்டுக் கொண்டார். சென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் கைதி அப்துல்லா. பல்வேறு வழக்குகளில் குண்டர்சட்டத்தில் ஷேக் அப்துல்லா அடைக்கப்பட்டிருந்தார்.

33.வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தண்டராம்பட்டு ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை....தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here