வெளிநாட்டிலிருந்து திரும்பியவரிடம் லஞ்சமாக டிவியைக் கேட்ட மதுரை விமானநிலைய அதிகாரி; தரமறுத்து டிவியை வீசியெறிந்த பயணி
துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திரும்பிய திருச்சியைச் சேர்ந்த பயணி ஒருவரிடம், மதுரை விமான நிலைய அதிகாரி ரூ. 7000 லஞ்சம் கேட்டிருக்கிறார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, 2000 அல்லது 3000 வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும் கேட்காமல் அந்த
அதிகாரி, பயணி வாங்கிவந்த ரூ. 5000 பெருமானம் உள்ள டிவியைக் கேட்டிருக்கிறார். மனம் நொந்த துபாயில் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பிய அந்தப் பயணி, டிவியை கீழே வீசி எறிந்திருக்கிறார். இந்தச் செய்தியும் படங்களும் முகநூலில் வைரலாகப் பரவி வருகின்றன. ‘அயல்நாட்டில் நம் உழைப்பைச் சுரண்டுகிறார்கள் நம் நாட்டில் நம் பணத்தை சுரண்டுகிறார்கள்’ என அயலில் வசிக்கும் யூசூஃப் ரியாஸ் தெரிவிக்கிறார்: மனிதாபிமானமற்ற மதுரை ஏர்போர்ட் பிச்சைக்காரர்கள்…துபாயில் இருந்து அல்லல் பட்டு துன்ப பட்டு துயரபட்டு நல்ல கம்பேனி டிவி கூட வாங்க பணம் இல்லாமல் வெறும் கையோடு வரக்கூடாது என்று சைனா டிவி நம்ம ஊரு மதிப்புக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள டிவி ஒன்று வாங்கி வந்த திருச்சியை சேர்ந்த நம் சகோதரிடம்< ;நம் மதுரை ஏர்போர்ட் பணம் திண்ணி அதிகாரி ரூபாய் 7000 ஆயிரம் கேட்க அவரோ அழுது புலம்பி கெஞ்சி கதறி காழில்விழாத குறையா 2000 அல்லது 3000வரை தருவதாக போரடிப்பார்த்தார்
விட்டானா அந்த வெளிநாட்டு துயரை அறியாத அதிகாரி ரூபாய் 7000 கொடு இல்லை என்றால் விட்டுவிட்டு ஓடு என்றான்
இவரோ பணம் இல்லாமல் உனக்கு இந்த டிவியை தந்துவிட்டு போவதற்கு இங்கேயே
உடைத்துவிட்டு போகிறேன் என்று உடைத்து எரிந்துவிட்டு வந்துவிட்டார்
இதை நாம் சும்மா விடுவதா அயல்நாட்டில் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள் நம் நாட்டில் நம் பணத்தை சுரண்டுகிறார்கள்.
இடம்: மதுரை ஏர்போர்ட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக