மத்திய அரசு ஊழியர்களூக்கு ஒரே தவணையில் 7 து ஊதிய குழு நிலுவைத்தொகை ஆகஸ்ட் சம்பளத்துடன் வழங்கப்படும் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மத்திய அரசு ஊழியர்களூக்கு ஒரே தவணையில் 7 து ஊதிய குழு நிலுவைத்தொகை ஆகஸ்ட் சம்பளத்துடன் வழங்கப்படும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் நிலுவைத்தொகை:ஆகஸ்ட் சம்பளத்துடன் வழங்கப்படும்

ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ஒரே தவணையாக, வரும் ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளுக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கான அரசாணை கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை மாத சம்பளம் ரூ.7,000ல் இருந்து ரூ.18,000 ஆகவும், அதிகபட்ச அடிப்படை மாத ஊதியம் ரூ.90,000ல் இருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 23.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு கணக்கிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும் என மத்திய அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த நிலுவைத் தொகையானது வரும் ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்பட உள்ளது.
ஊதிய உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 53 லட்சம் ஓய்வூதிய தாரர்களும் பலன் அடைவார்கள். அதே சமயம், 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல் செய்வதால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

* கடந்த 2014ம் ஆண்டில் நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது.
* இக்குழு 2015 நவம்பரில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது.
* ஊதிய உயர்வின்படி, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 2.57 மடங்கு தொகை அதிகம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here