உலகில் 60 சதவிகிதம் பெண்களும் 17 சதவிகிதம் ஆண்களும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றர்கள். ஆர்த்ரட்டீஸ் என்றழைக்கப்படும் கால் மூட்டு வலி பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குழந்தைப் பிறப்பினால் ஏற்படும் சுண்ணச் சத்து மீண்டும் அவர்களுக்குத் தேவையான அளவு கிடைப்பதில்லை. குழந்தைகள் மற்றும் வீட்டிலிருப்போர் மிச்சம் வைக்கும் உணவையும், சிறிதளவுள்ள உணவைக் கூட தூக்கி எறிய மனமின்றி வயிற்றுக்குள் போட்டு வயிற்றை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தி அவர்களின் வயிற்றுக்கு கேடு விளைவிக்கின்றனர்.
எனவே தாய்மார்கள் மீதமான உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமாக உணவு உண்ணக் கூடாது. இயற்கை உணவுக்கு மாற வேண்டும்.
பழங்கள் கொட்டைப் பருப்புகள் போன்றவற்றை உண்டு இழந்த சுண்ணச் சத்தைத் திரும்பப் பெறத் தாய்மார்கள் முயற்சிக்க வேண்டும்.
பேரிச்சம் பழங்களையும் தேங்காயும் காலை உணவாகத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எல்லாவிதமான எலும்பு வலிகளையும் குறைக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்கூட தேங்காயுடன் பேரிச்சம்பழங்களைக் கலந்து உண்டு வந்தால் விரைவில் குணமடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக