இரவு செய்திகள் 02/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 02/08/2016

📡சென்னையில் ஒரே நாளில் 5 இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவரை கைது செய்தது போலீஸ்

சென்னையில் ஒரே நாளில் 5 இடங்களில் சங்கலி பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

📡லஞ்சம் தர மறுத்ததால் சிகிச்சை தாமதமாகி ஒருவர் உயிரிழந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு

மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் லஞ்சம் தர மறுத்ததால் சிகிச்சை தாமதமாகி ஒருவர் உயிரிழந்த வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என அண்ணாநகர் காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜேந்திரபிரசாத் எனபவரை உள்நோயாளி பிரிவில் சேர்க்க ரூ.300 லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது. லஞ்சம் தர மறுத்ததால் சிகிச்சை தாமதமாகி ராஜேந்திரபிரசாத் உயிரிழந்ததாக தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

📡டிசம்பருக்குள் டீசல், பெட்ரோல் 10 ரூபாய்க்கு கிடைக்கும் : ராமர் பிள்ளை அதிரடி

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார்.

1996-ம் ஆண்டு பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகை எரிபொருளை தாம் தயாரித்துள்ளதாக அறிவித்தவர் ராமர் பிள்ளை. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் ராமர்பிள்ளை குறித்த செய்திகள் வெளியாவதும் மறைவதும் தொடர் கதையாகி வருகிறது.

தற்போது சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர்பிள்ளை, ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் ராணுவ பயன்பாட்டுக்காக தம்முடைய மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் இதற்காக மும்பையில் உள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

📡இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 6 மாவட்டங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் இயங்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரை நிர்வாகம் பணியிட மாற்றம் செய்ததே போராட்டத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி நிரந்தர ஊழியர்கள் 40 பேரும் பணிக்குறைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

📡கொலை வழக்கு: திருத்தணி நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே போலிவாக்கத்தில் ஏழுமலை என்பவர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் சரணடைந்துள்ளனர். சாந்தகுமார், திருநாவுக்கரசு, மகேஷ் உள்ளிட்ட 6 பேர் திருத்தணி நீதிமன்றத்தில் 6 பேர் சரணடைந்தனர். 

📡குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 வழங்கக் கோரிக்கை

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 வழங்கக் கோரிக்கை

எந்தத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றாலும் அவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3,500 என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டுமென ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

📡12 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சங்கு தீர்த்த விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

📡நடுரோட்டில் பொது மக்களிடம் தகராறு: போலீஸ்காரருக்கும் அடி, உதை போதை ஆசாமி பிடிபட்டார்

சென்னை: பொது மக்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயன்ற காவலருக்கு, சரமாரி அடி, உதை விழுந்த சம்பவம் திருவல்லிக்ேகணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணி 

📡ஐ.பி.எஸ்.. அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி,
1. திருவாரூர் எஸ்.பி.,யாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2. விருதுநகர் மாவட்ட எஸ்.பி.,யாக ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.3. புதுக்கோட்டை எஸ்.பி.,யாக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக ஜியா உல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. கோவை போக்குவரத்து துணை ஆணையராக எஸ். சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக சசி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
7.சென்னை தெற்கு பிராந்திய ஊழல் தடுப்பு காவல் கண்காணிப்பாளராக சரோஜ் குமார் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
8. சென்னை சட்டம் ஒழுங்கு துணை ஐ.ஜி.,யாக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
9.ஈரோடு சிறப்பு படை காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
10. சென்னை சீரூடை பணியாளர் தேர்வாணைய காவல் கண்காணிப்பாளராக பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
11. சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.12. சென்னை பெருநகர தெற்கு துணை ஆணையராக அரவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

📡ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு குற்றாலத்தில் திரளானோர் குவிந்தனர்: மூதாதையர்களுக்கு தர்ப்பணம்-பெண்கள் சுமங்கலி பூஜை

தென்காசி: ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு குற்றாலத்தில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குவிந்தனர். கூட்டம் அலைமோதியதால் வரிசையில் காத்திருந்து அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். 

📡தற்கொலை செய்ய வந்தார்களாம்; நெல்லை பஸ் நிலையத்தில் மைனர் ஜோடி சிக்கியது: விசாரணையில் பரபரப்பு

நெல்லை: தற்கொலை செய்யும் முடிவுடன் சுற்றிய மைனர் காதல் ஜோடியை நெல்லை புதிய பஸ் நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர். சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு வரும் அரசு பஸ்சில் இன்று காதல் ஜோடி ஒன்று அழகியபாண்டியபுரத்தில் ஏறியது. பஸ்சின் இருக்கையில் அமர்ந்து கொண்டே அந்த காதல் ஜோடி எதிர்காலம் குறித்து பேசி கொண்டே வந்தனர். அப்போது இளம்பெண் தனது வீட்டில் திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளதாகவும், எங்காவது ஓடிச் சென்று வாழ்வோம் அல்லது தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளார். இந்த உரையாடலை பஸ்சின் பின்சீட்டில் இருந்து கேட்ட ஒருவர் உடனடியாக நெல்லை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

காதல் ஜோடியை காப்பாற்றுங்கள் என அவர் கேட்டு கொண்டார். 

கட்டுப்பாட்டு அறை போலீசார் மேலப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பஸ் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்ததும் போலீசார் சென்று காதல் ஜோடியை வழிமறித்து பிடித்தனர். அதன்பிறகு அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் மைனர் என்பதும், மானூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், காதல் ஜோடியை சரணாலயத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். அதன்பிறகு இருவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

📡பத்ம விருதுக்களுக்கு பரிந்துரைக்க செப்.15 கடைசி நாள்

புதுடில்லி: 2017 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைகளை அனுப்ப செப்டம்பர் 15 ம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி கெளரவிக்கிறது. 2017 ம் ஆண்டுக்கான பத்ம விருது பரிந்துரை துவக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படும் பரிந்துரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பரிந்துரைகளை அனுப்பலாம். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது.

📡கடுமையான காய்ச்சல்... மோடி தொகுதியில் பிரசாரத்தை ரத்து செய்தார் சோனியா !

வாரணாசி: கடும் காய்ச்சல் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி தொகுதியில் சோனியா கலந்துகொள்ள இருந்த பிரசார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

📡கோயில் அருகே மர்ம சூட்கேஸ்: திருப்பூரில் இன்று பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் அரிசிக்கடை வீதியில் ஒரு கட்டிடத்தின் முன்பு இன்று பெரிய சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. இதன் அருகே ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரிசிக்கடை வீதியிலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது. இந்நிலையில், கேட்பாரற்கு கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. கோவையில் உள்ள வெடிகுண்டு நிபுணர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களின் வருகைக்காக போலீசார் நீண்ட நேரம் சூட்கேசை திறக்காமல் காத்திருந்தனர். இதனால் அங்கு பீதி நிலவியது.


📡பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க கூடாது என சிவசேனா கூறியுள்ளது. ராஜ்நாத் சிங்கின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர் அங்கு செல்ல வேண்டாம் என காங்கிரஸ் கட்சியும் கேட்டுக் கொண்டுள்ளது.

📡சென்னை ஐகோர்ட்டில், 1,95,946 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதி நிர்வாகத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐகோர்ட் கிளையில், 88.482 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மற்ற கோர்ட்களில், 10,82,793 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

📡கனடாவைச் சேர்ந்த முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பெல் மற்றும் பின்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியாவும் சேர்ந்து, 5ம் தலைமுறைக்கான இணைய தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதனை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

📡பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பின் போது குஜராத்தின் புதிய முதல்வர் பெயர் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்

📡உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் என்ற இடத்தில் பெண் மற்றும் அவரது மகள் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உத்திர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் காசியாபாத்தில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஆகஸ்ட் 4-ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல்

📡குஜராத்தில் முதல்வரை மாற்றினாலும், அங்கு பா.ஜ.,வை காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார்.

📡ஆனந்தி பென் ராஜினாமா, ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. குஜராத்தில் ஆம் ஆத்மியின் வளர்ச்சியை கண்டு பயத்தினால் தான், ஆனந்தி பென் படேல் ராஜினாமாவை பா.ஜ., மேலிடம் ஏற்றுக்கொண்டுள்ளது--டில்லி முதல்வர் கெஜ்ரிவால் 

📡சென்னையில் 104 கி.மீ தூரத்திற்கு 2வது மெட்ரோ ரயில் திட்டம் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.₹44 கோடியில் 3 வழித்தடங்களில் 104.6 கி.மீ. தூரத்திற்கு ரயில் இயக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் மொத்தம் 104 ரயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன.

📡தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டுள்ளார்.இவரது பதவி நீக்கம் செல்லாது என இந்திய பேட்மிண்டன் சங்கத் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா அறிவித்துள்ளார்.அன்புமணியை நீக்க தமிழ்நாடு சங்கத்தலைவருக்கு அதிகாரம் இல்லை; அன்புமணியே தலைவராக தொடர்வார் என கூறியுள்ளார்.

📡ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது. இதில், சர்வதேச யோகா நிபுணர் பாபா ராம்தேவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

📡மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., கூட்டணி அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

📡அரசின் பல்வேறு சேவைகளை இணைய வழியில் சுலபமாகப் பெறுவதற்காக பொதுமக்கள் ஆதார் எண்ணுடன் தங்கள் செல்லிடப்பேசி எண்களை இணைக்க வேண்டும் என்று இந்திய பிரத்யேக அடையாள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

📡திரைப்படங்களில் 'புகை எச்சரிக்கை' வாசகத்தை தடை செய்யும் ஷ்யாம் பெனகல் குழு பரிந்துரையை ஏற்கக் கூடாது என் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

📡பாகிஸ்தானில் பேருந்து-டிரக் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் பலியானார்கள்.

📡காஷ்மீர் கல்வித் துறை அமைச்சர் வீடு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

📡சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக திருத்திய மனுவை தாக்கல் செய்யும்படி பியூஷ் மானுஷுக்கு சேலம் குற்றவியல் நடுவர் மன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

📡ஆனந்திபென் படேலை 'பலியாடு' ஆக்குவதால் பாஜக தப்பித்துவிட முடியாது-- ராகுல்

📡வெளிநாட்டு நிறுவனங்கள் தேடி வந்து முதலீடு செய்யும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது --தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்

📡குளச்சல் துறைமுகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் திறந்து வைப்பார்--அமைச்சர் ஜெயக்குமார

📡சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ராஜ்நாத் சிங், திட்டமிட்டபடி பாகிஸ்தான் செல்வார் என்று மத்திய அரசு தெரிவித்தது.

📡பஞ்சாப், காஷ்மீர் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

📡அனைத்து கலாசாரங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும்போதுதான் உலகமே வளமடையும் -- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

📡போலி பணி நியமன ஆணையுடன் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் பணியில் சேருவதற்காக திங்கள்கிழமை வந்த 9 பேர் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📡இளம் குற்றவாளியை தப்ப விட்ட விவகாரத்தில், அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

📡இந்தியா பங்களாதேஷ் எல்லை சிலிகுரி அருகே சட்டவிரோதமாக கால்நடை கடத்த முயன்ற கிராம மக்களுக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.

📡மக்கள் பிரதிநிதிகள் பொது இடத்தில் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

📡தால்கோ விரைவு ரயில்: டெல்லி- மும்பை இடையே இறுதி கட்ட சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது

📡கபாலி படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை பொது நலனுக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

📡மத்திய நிதித்துறை ஒப்புதல் கிடைத்தவுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

📡அ.தி.மு.க. ஒரு வன்முறை இயக்கம்-- EVKS இளங்கோவன்

📡கோயில், காவல்நிலையத்தில் நடக்கும் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு

கோயில், காவல்நிலையத்தில் நடக்கும் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமைச் செயலாளர், பத்திரப்பதிவு ஐ.ஜி. 8 வாரத்தில் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

📡தாயை கொலை செய்த மகனின் ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி

தாயை கொலை செய்த மகனின் ஜாமீன் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 24ல் தாயை கொலை செய்த ஜெ.ஜெ.நகரை சேர்ந்த சாத்தியகுமாரின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. தாயை போற்றிய ஆதிசங்கரர் வாழ்ந்த பூமியில் தாயை கொன்றவருக்கு எப்படி ஜாமீன் தர முடியும் என என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

📡செப்டம்பர் 11ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிப்பு

வனத்துறை பாதுகாப்பு பணியில் உயிரிழந்தவர்களை நினைவுகூற செப்டம்பர் 11 தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட உள்ளது. மேலும் வனப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் திட்டமாக ஆட்சியர் தலைமையில் குறைகள் கேட்கப்படும் என்றும் பனைமரங்களை பாதுகாத்தல் திட்டப்படி ரூ.1.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

📡சென்ட்ரல் ரயில் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். தலித் மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், காஷ்மீரில் ராணுவத்தை திரும்பப் பெறவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

📡70வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட திட்டம்: வெங்கையா நாயுடு

70வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தகவல் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை சுதந்திர தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

📡சட்டப்பேரவையில் பேச அனுமதி தரப்படவில்லை விஜயதாரணி புகார்

சட்டப்பேரவையில் பேச அனுமதி தரப்படவில்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி புகார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தலைவர் தனபால் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார். நாளை சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு தராவிட்டால் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவேன் என பேட்டியளித்துள்ளார்

📡மேற்கு வங்க பெயர் மாறுகிறது

மேற்கு வங்க பெயரை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆங்கிலத்தில், பெங்கால் எனவும், பெங்காலி மொழியில் பங்கா எனவும் பெயர் மாற்ற மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெயர் மாற்றத்திற்கான முடிவு முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை வரும் 26ம் தேதி கூட்டவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சக கூட்டங்களில், மாநிலத்தின் அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்க நீண்ட நேரமாவதால், மாநிலத்தின் பெயரை மாற்ற மம்தா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அகர வரிசைப்படி வாய்ப்பு வழங்கப்படுவதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக மம்தா பல முறை புகார் கூறியிருந்தார்.

பெயர் மாற்றம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற பின்னர், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

📡மின்கம்பி அறுந்து விழுந்ததால் விழப்புரம் நிலையத்தில் 3 ரயில்கள் நிறுத்தி வைப்பு

மின்கம்பி அறுந்து விழுந்ததால் விழப்புரம் ரயில் நிலையத்தில் 3 ரயில்கள் நிறுத்திய வைக்கப்பட்டுள்ளது. சென்னை- காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ஒருமணி நேரமாக விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சேது விரைவு ரயில்களும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

📡தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை இன்று(ஆக.,2-ம் தேதி) சவரனுக்கு ரூ.72 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,002-க்கும், சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.24,016-க்கும், 24 காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.90 உயர்ந்து ரூ.32,110-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.52.90-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.49,470-க்கும் விற்பனையாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here